சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு! ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்து.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சின் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் ரயில்வே பணிமனை உள்ளது. இங்கிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எழும்பூருக்கு 11.30 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது. எழும்பூருக்கு ரயில் நிலைய நடைமேடையை நோக்கி வந்த போது 50 மீட்டருக்கு முன்பாக ரயில் எஞ்சினின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.
தடம் புரண்ட ரயில் எஞ்சினை மீண்டும் தண்டவாளத்திற்கு கொண்டு வரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் எஞ்சின் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு எதுவுமில்லை.