நவீனகால அமைதி திருமணம்: இயர்போன்களுடன் சிறப்பாக நடந்த திருமண விழா: ஆட்டத்திற்கு பஞ்சமில்லை
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற திருமணம் ஒன்று வித்தியாசமான கொண்டாங்களுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இயர்போன்களுடன் திருமணம்
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற திருமணம்(Wedding) ஒன்று அமைதியை தேர்ந்தெடுத்து கொண்டாட்டங்கள் மீதான புதிய விருப்பதை உருவாக்கியுள்ளது.
அதாவது இந்தியாவில் நடைபெற்ற திருமணம்(Marriage) ஒன்றில் மணமக்கள் மற்றும் திருமண குடும்பங்கள் வழங்கமான மேளதாள கொண்டாங்கள் ஒலிப்பெருக்கியில் அதிரும் பாடல்கள் இவற்றை தவிர்த்து விட்டு, இயர்போன்களை(earphone) மாட்டிக் கொண்டு அமைதியான முறையில் சற்றும் குறைவில்லாத கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
ஆனால் இந்த புத்திசாலித்தனமான முடிவு விழா கொண்டாட்டத்தில் எத்தகைய குறைவையும் ஏற்படுத்தவில்லை. அத்தோடு அதிகப்படியான இணையவாசிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஒலி மாசுபாட்டை தவிர்க்க எடுத்த முடிவு
இந்த அமைதி வீடியோ(silent baraat) ஒரு சமூக ஊடக பகிர்வாளரால் (vlogger) எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில் மிக குறைந்த நேரத்தில் இந்த வீடியோ புகழ் பெற்றுள்ளது.
அதில் அவர், திருமணமானது புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பகுதிக்கு அருகில் நடைபெற்றதால், அமைதியை குலைக்காமல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தாமல் விழாவை சிறப்பாக நடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.