|

நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.. மோடி வீடு கட்டி தருவார் என்ற அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார் என அமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அமைச்சர்

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சராக பாபுலால் கார்டி பதவி வகித்து வருகிறார்.

இவர், உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார். இந்நிலையில், நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பாபுலால் கார்டி கலந்து கொண்டார்.

சர்ச்சை பேச்சு..

பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாபுலால் கார்டி, “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக் கூடாது என்பது தான் கனவாகவே இருக்கிறது.

மேலும், நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார். அப்படி இருக்கும் போது உங்களுக்கு வேறு என்ன பிரச்சனை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அமைச்சர் பாபுலால் கார்டிக்கு 2 மனைவிகள், அவர்களது 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *