பெண்களை கர்ப்பமாக்கினால் 13 லட்ச ரூபாய்: மோசமான மோசடியில் சிக்கிய நபர்கள்

இந்தியாவில், பெண்களை கர்ப்பமுறச் செய்தால் 13 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரத்தை நம்பி ஒரு கூட்டம் ஆண்கள் பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

பெண்களை கர்ப்பமாக்கினால் 13 லட்ச ரூபாய்

பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் குமார், பேஸ்புக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ’அனைத்திந்திய கர்ப்பமுறச்செய்யும் பணி சேவை’ என்ற நிறுவனம் வெளியிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ அவர் கண்ணில் பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கும் இந்த பணியில் இணைய விரும்பினால், கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என அந்த வீடியோ கூற, கரும்பு தின்னக் கூலியா என்று ஆச்சரியப்பட்ட குமார், அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

சிறிது நேரத்தில், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவருடன் பேசிய நபர், தன் பெயர் சந்தீப் என்று கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.

ஒரு பெண்ணுடன் பாலுறவு கொண்டால், 5 லட்ச ரூபாய் கிடைக்கும் என்றும், அந்தப் பெண் கர்ப்பமுற்றால், கூடுதலாக 8 லட்ச ரூபாய் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார் சந்தீப்.

பண ஆசையும் சபலமும் ஒன்று சேர, குமார் சம்மதம் தெரிவிக்க, அந்தப் பணிக்கான பதிவுக்கட்டணமாக 799 ரூபாய் செலுத்தவேண்டுமென சந்தீப் கூற, உடனடியாக பணம் செலுத்தியுள்ளார் குமார்.

பண ஆசையும் சபலமும்

சில பெண்களின் படத்தை அனுப்பி, இதில் நீங்கள் எந்தப் பெண்ணை கர்ப்பமாக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யலாம் என சந்தீப் கூற, அடுத்த சில வாரங்களில் மனைவிக்குத் தெரியாமல் குமார், சந்தீப்புக்கு நீதிமன்ற ஆவணங்களுக்கு, டெபாசிட்டுக்காக, சேவை வரி என மொத்தம் 16,000 ரூபாய் செலுத்தியுள்ளார்.

குமார் வாழும் அதே நகரில், ஒரு ஹொட்டலில் அறை முன்பதிவு செய்துள்ளதாகவும், அங்குதான் குமார் அந்தப் பெண்ணை சந்திக்கவேண்டும் என்றும் சந்தீப்புடைய சக அலுவலர்கள் கூற, கனவில் மிதந்திருக்கிறார் குமார்.

ஒரு கட்டத்தில், தனக்குக் கொடுப்பதாக வாக்களித்த 5 லட்ச ரூபாயைக் கேட்டிருக்கிறார் குமார். அதற்கு சந்தீப், தான் குமாரின் வங்கிக்கணக்கில் 512,000 ரூபாய் செலுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கு ஒரு ரசீதையும் அனுப்பி, வருமான வரியாக 12,600 ரூபாய் செலுத்தினால், அந்த பணம் குமாருக்குக் கிடைக்கும் என கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு மேல் கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று குமார் கூற, உடனே சந்தீப்பின் பேச்சின் தோரணை மாறியுள்ளது. உங்கள் கணக்கில் திடீரென 5 லட்ச ரூபாய் வந்துள்ளதால், வருமான வரித்துறையினர் உங்கள் வீட்டுக்கு ரெய்டுக்கு வரப்போகிறார்கள், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று கூற, பயந்துபோய் சில நாட்களுக்கு தனது மொபைலை அணைத்துவைத்துவிட்டாராம் குமார்.

குமார் உட்பட சிலர் இந்த மோசடியைக் குறித்து பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிஸ் விசாரணையில், குமாரைப் போல பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதும், வெளியே தெரிந்தால் அவமானம் என அஞ்சி பலர் பொலிசாரிடம் புகாரளிக்காமல் விட்டுவிட்டதும் தெரியவந்துள்ளது.

பொலிசார் இந்த மோசடி தொடர்பாக 9 பேரைக் கைது செய்துள்ளதுடன், மேலும் 18 பேரைத் தேடிவருகிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு நடந்த பின்பும், குமாரை ஹொட்டலில் சந்திப்பதாகக் கூறிய பெண், மீண்டும் அவரை அழைத்து, சந்தீப் எல்லாரையும் ஏமாற்றிவிட்டதாகவும், இப்போதும் 3,000 ரூபாய் வரி செலுத்தினால், 90,000 ரூபாயாவது கிடைக்கும் என்றும் கூற, தனக்கு ஒரு மாத சம்பளமே 15,000 ரூபாய்தான் என்றும், தான் கொடுத்த பணத்தில் 10,000 ரூபாயையாவது திருப்பிக் கொடுங்கள் என்றும் கெஞ்சியிருக்கிறார் குமார்.

இதற்கிடையில், விடயம் வெளியே தெரியவந்ததால், குமாரின் மனைவி அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *