உடல் பருமனா? பச்சை திராட்சையை சாப்பிட்டால் சில நாட்களில் பக்காவா எடை குறையும்

மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க திராட்சையின் நன்மைகள் (Grapes For Weight Loss):

குளிர் காலத்தில் திராட்சை (Grapes) சாப்பிட விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். சாறு நிறைந்த, இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழம் சாப்பிட மிகவும் சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் ஏராளமனா சத்துக்கள் உள்ளன. இதை ஊட்டச்சத்தின் பொக்கிஷம் என்றே கூறலாம். திராட்சையில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நல்ல அளவில் காணப்படுகின்றன. இது தவிர, திராட்சையில் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகளும் நிறைந்துள்ளன.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு திராட்சை ஒரு சிறந்த வழியாக இருக்கும். இவற்றை உட்கொள்வதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் எடையை குறைக்கும் விதம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

உடல் எடையை குறைக்க பச்சை திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Green Grapes Benefits For Weight Loss)

திராட்சையின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது குறைந்த கலோரிகள் கொண்ட பழம். 100 கிராம் திராட்சையில் 70 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் அது ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் நல்ல அளவு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எடை இழப்புக்கு, குறைந்த கலோரி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமான விஷயமாகும். ஏனெனில் ஒரு நபர் எடை குறைக்க (Weight Loss) வேண்டியிருக்கும் போது, ​​அவர் தினசரி கலோரி உட்கொள்ளலை விட 200-300 குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில், திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்வது, குறைந்த கலோரிகளுடன் (Low Calorie) நீண்ட நேரம் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கவும், தேவையான ஊட்டச்சத்தைப் பெறவும் மிகவும் உதவியாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *