Money Luck: 3 ராசிகள்.. சுக்கிரனின் கிறிஸ்துமஸ் சுபயோகம் தான்
சுக்கிர பகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். நவக்கிரகங்களில் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய சுக்கிர பகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் சுக்கிர பகவான் துலாம் ராசியில் இருந்து வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று செவ்வாய் ஆளக்கூடிய விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் மிகவும் மங்களகரமாக அமைந்துள்ளது அதன் காரணமாக அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகளை இங்கே காண்போம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத்தொழில் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
மகர ராசி
சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் பதினோராம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும் வாராக்கடனாக இருந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் சுக்கிர பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். அதன் காரணமாக எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.