இது தெரியுமா ? சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால்
அரிசியை ஒன்றிரண்டு முறை லேசாக அலசினால் போதும். அரிசியை கழுவுகிறேன் என்று நிறைய முறை தண்ணீரை ஊற்றி கழுவினால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிப் போகும்.இப்படி அரிசி கழுவும் தண்ணீர் மற்றும் சாதம் வடித்த தண்ணீரை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்?
முதல் முறை தண்ணீர் ஊற்றி அரிசியை கழுவும் பொழுது மட்டும் அந்த தண்ணீரை கீழே கொட்டி விடலாம். இரண்டாம் முறை நீங்கள் கழுவும் தண்ணீரில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கும், அதனை வீட்டில் இருக்கும் செடி, கொடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் செழித்து வளரும். அதற்கு மேல் அரிசியை கழுவ வேண்டிய அவசியமில்லை. நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டியது தான். சாதம் வடித்த கஞ்சியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அதில் லேசாக உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் முற்றிலும் தீரும். நாள் முழுவதும் புத்துணர்சி கிடைக்கும். உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து உடலை குளிர்ச்சி அடைய செய்யும் இதனால் உடல் சூட்டால் வரக்கூடிய எல்லா பிரச்சினைகளும் தீரும். உடலில் நீரின் அளவு குறையும் பொழுது நீர்கடுப்பு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அடிவயிற்றில் அதீத வலியும், சிறுநீர் கழிப்பதில் எரிச்சலும் ஏற்படும். இப்படியான பிரச்சனைகளும், வெள்ளை படுதல் பிரச்சனை, கண் எரிச்சலும் தீர தினமும் இந்த கஞ்சியை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சாதம் வடித்த கஞ்சியுடன் சிறிது உப்பு கூட்டி பருக, கண்ணெரிச்சல் நீங்கி குளிர்ச்சியடையும். உடல் உஷ்ணம் குறையும்.
பேதி ஏற்படும்போது அரிசிக் கஞ்சியில் உப்பு சேர்த்து குடித்தாலும், சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் நல்லது.
இரவு வடித்த சாதத்தில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அந்த நீரில் உப்பு சேர்த்து குடிப்பது அல்சர் போன்றவற்றிற்கு நல்லது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரிசி கழுவிய நீரை லேசாக சூடுபடுத்தி கால் மற்றும் கைகளில் ஊற்ற எலும்பு பலம் பெறும்.