கருப்பு திராட்சை: உடல் எடையை குறைக்க ருசியான, ஈசியான வழி.. இப்படி சாப்பிடுங்க
உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான தொந்தரவுகள் மற்றும் மரபணு காரணங்களால் பலருக்கு உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற கடுமையான நோய்களும் உடலை ஆட்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்க அல்லது எடை குறைக்க, மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். எனினும் சில எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கருப்பு திராட்சை (Black Grapes)
கருப்பு திராட்சை சாப்பிடுவது உடல் எடையை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? கருப்பு திராட்சையை உட்கொள்வது, உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை எரித்து, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடல் எடையை குறைக்க கருப்பு திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதற்கான சரியான வழி பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
எடை இழப்புக்கு கருப்பு திராட்சையின் நன்மைகள் (Black Grapes For Weight Loss):
உடல் எடையை குறைக்க (Weight Loss), போதுமான அளவு நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் உடலின் மெட்டபாலிசம் மேம்படும், இது உடல் எடையை குறைக்க உதவும். திராட்சை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆர்கானிக் அமிலங்கள் மற்றும் பாலியோஸ் போன்ற சத்துக்கள் திராட்சையில் உள்ளன. திராட்சையில் கிடைக்கும் இந்த சத்துக்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் அஜீரணம், வயிற்று வாயு, எரியும் உணர்வு மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.