அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை… அனைத்து பிரச்சனைகளையும் போக்க கை கொடுக்கும் முருங்கை
காயக்றிகளின் மூலம் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த ஒரு சமச்சீர் உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். காயகறிகள் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும், கண் மற்றும் செரிமானப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இவை இரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும். காய்கறிகள் நிறைவான உணர்வை அளித்து பசியையும் கட்டுப்படுத்தும்.
முருங்கைக்காய் (Drumstick)
பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் காய்களில் முருங்கைக்காயும் ஒன்றாகும். முருங்கைக்காய் சாம்பார், கறி, சூப், சாம்பார் சாதம் என பல வித உணவு வகைகளில் பயன்படுகின்றது. சுவையின் அரசனாக உள்ள முருங்கைக்காய் சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், பல நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். முருங்கைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன. இதில் உள்ள சத்துக்களால் பல நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். முருங்கைக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முருங்கைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Drumstick):
– நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்:
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் அதிக அளவில் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்த (Blood Pressure) பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். இதில் உள்ள மெக்னீசியம் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முருங்கைக்காயின் கஷாயத்தை காலையில் உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பயன்படுத்துவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பற்களை வலுப்படுத்தவும் நன்மை பயக்கும்.
– இதயத்திற்கு நன்மை பயக்கும்:
இன்றைய காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதயம் (Heart Health) தொடர்பான நோய்களுக்கு மக்கள் பலியாகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முருங்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் பிளேக் குவிவதைத் தடுக்கின்றன. முருங்கை இலைகளில் உயிர்ச்சக்தி வாய்ந்த கலவைகள் உள்ளன. இதை சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
– சரும ஆரோக்கியம்:
முருங்கையை உணவில் சேர்த்து வந்தால், சருமத்தின் பொலிவை அது அதிகரிக்கும். வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. அவை சருமத்திற்கு (Skin Care) நன்மை பயக்கும். முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் பருக்களை நீக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)