உஷார்!!! இந்த அறிகுறிகள் இருக்கிறதா? மாரடைப்பிற்கான முன்னறிவிப்பாக கூட இருக்கலாம்!!

னிதனின் அடிப்படை தேவைகள் மூன்று:1. உணவு
2. உடை
3. இருப்பிடம்
ஆனால் தற்போது
4.ஆரோக்கியம்
5. பணம்

பணத்தை யார் வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும்.

ஆனால் ஆரோக்கியத்தை பொருத்த வரையில் அவரவர் ஆரோக்கியத்தை அவரவர் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

இன்று மனிதர்களை பாதிக்கும் நோய்களில் முக்கியமான ஒன்று மாரடைப்பு. இன்றைய காலகட்டங்களில் அது எந்த வயதினருக்கும் வரக்கூடும். நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், போதிய உடல் உழைப்பு இல்லாமையும், தீய பழக்கங்களும் அதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றது. நீங்கள் அலட்சியம் செய்யும் அறிகுறிகளில் சில அறிகுறிகள் மாரடைப்பிற்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

இதயம் ஒரு நொடி கூட நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. ரத்தத்தின் மூலம் மற்ற உறுப்புக்களுக்கு சத்துக்களையும் ஆக்சிஜனையும் கொண்டு சேர்க்கிறது. இதயத்தில் உள்ள குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள் மாரடைப்பில் முடியலாம்.

1.அசாதாரணமான சோர்வு.
2.திடீரென்று அடிவயிற்றில் ஏற்படும் வீக்கம் அல்லது வலி.
3.அஜீரண தொந்தரவுகள்.
4.மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் அல்லது மூச்சு திணறல்.
5.தலைசுற்றல்.
6.தூக்கமின்மை.
7.அதிகமான வியர்வை வெளியேறுவது.
8.பதட்டம்,
9.இதயத்துடிப்பில் மாற்றங்கள்.

10. நெஞ்செரிச்சல், மார்பில் ஏற்படும் வலி கை மற்றும் கழுத்திற்கு பரவுவது.

11.கால்கள் அல்லது பாதங்களில் வீக்கம்

இவை மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.

மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால் மருத்துவரை உடனே அணுகவும். 35 வயதுக்கு மேல் வருடத்திற்கு ஒருமுறை, உடலை முழுமையாக பரிசோதித்து கொள்வது நல்லது. தினமும் எளிய உடற்பயிற்சிகளும், நல்ல உணவு பழக்கங்களும், போதிய அளவு ஓய்வும், உறக்கமும் உங்களை நோய்களின் பிடியில் விழுவதிலிருந்து காக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *