Kanguva: திடீர் வள்ளலான சூர்யா… பிரியாணி வரிசையில் கோல்ட் செயின்… கங்குவா ஸ்பாட்டில் சர்ப்ரைஸ்
சென்னை: சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். முன்னதாக அவர் சிறுத்த சிவா இயக்கிய கங்குவா படத்தில் நடித்து வந்தார்.
இந்தப் படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டதாக சூர்யா ட்வீட் செய்திருந்தார். அதோடு திடீரென வள்ளலாக மாறி கங்குவா படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார்.
திடீர் வள்ளலாக மாறிய சூர்யா
சூர்யாவின் 42வது படமான கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கங்குவா படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டதாக ட்வீட் செய்திருந்த சூர்யா, இதில் நடித்தது குறித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் கங்குவா படத்தில் நடித்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ள கங்குவா, சூர்யா கேரியரில் ஹை பட்ஜெட் மூவி என சொல்லப்படுகிறது. டெக்னிக்கலாகவும் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஐமேக்ஸிலும் வெளியாகவுள்ளதாம். அதோடு 30க்கும் மேற்பட்ட மொழிகளில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா மினி டீசர் வெளியாகியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக பொங்கலுக்கு கங்குவா படத்தில் இருந்து ஏதேனும் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் கங்குவா படப்பிடிப்பில் அனைவருக்கும் சூர்யா பிரியாணி விருந்து கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி டிவிட்டரில் வைரலாகின. இப்போது அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளாராம் சூர்யா.
பொதுவாகவே இயக்குநர், இசையமைப்பாளர் என பெரிய பெரிய டெக்னீஷியன்களுக்கு மட்டுமே ஹீரோக்கள் சார்பில் பரிசுகள் போகும். ஆனால் சூர்யாவோ வழக்கத்துக்கு மாறாக புதிய ரூட்டில் அன்பளிப்பு கொடுத்து அசத்தியுள்ளார். அதன்படி கங்குவா படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்களில் குறைவான சம்பவளம் வங்கும் கலைஞர்களுக்கு தங்கச் சங்கிலி அன்பளிப்பாக கொடுத்துள்ளாராம்.
இதனால் கங்குவா டீம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. முதலில் பிரியாணி ட்ரீட் வைத்த சூர்யா, இப்போது கோல்ட் செயின் கொடுத்து அசரடித்துள்ளார். சூர்யா இப்படி திடீரென வள்ளலாக மாறியது கங்குவா படக்குழுவினரை மட்டும் அல்லாமல் கோலிவுட்டையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கங்குவா ஸ்பாட்டில் சூர்யாவின் இந்த அன்பளிப்புகளால், இப்போது சுதா கொங்கராவின் சூர்யா 43 படக்குழுவும் தங்க செயின் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது.