Vijay – முதலமைச்சர் நாற்காலிதான் விஜய்யின் டார்கெட்.. பத்திரிகையாளர் அந்தணன் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது.

தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். இந்த சூழலில் கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பலமான கோரிக்கைகளை முன்வைத்துவருகிறார்கள். அவரது செயல்பாடும் அரசியல் நகர்வை நோக்கியே இருப்பதாக பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

விஜய் தற்போது தனது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், பிரேம்ஜி அமரன், வைபவ், மீனாட்சி சௌதரி, சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி பிறகு தாய்லாந்தில் சில நாட்கள் ஷூட் செய்யப்பட்டது. அங்கு முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

துருக்கி டூ சென்னை: தாய்லாந்து ஷெட்யூலை முடித்துவிட்ட படக்குழு சென்னை திரும்பி குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து அடுத்தக்கட்ட ஷெட்யூலுக்காக துருக்கியில் முகாமிட்டிருந்தது படக்குழு. அங்கு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை கேள்விப்பட்ட விஜய் உடனடியாக ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்னை வந்து விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு: அதனை முடித்துவிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக இரண்டு மாவட்டத்தின் ஊர்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. எனவே மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். பலர் வீடுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி விஜய்யும் நேரடியாக சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அரசியல் அச்சாரம்: இதற்கிடையே விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்துமே அரசியல் நகர்வை உணர்த்துவதுபடியே இருப்பதாக பலரும் கூறினார்கள். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தார். இதனை கவனித்த திரைத்துறையினர் இந்த நடவடிக்கைகள் எல்லாம் விஜய் அரசியல் நகர்வை வலுவாக ஆரம்பித்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக விவரமறிந்தவர்கள் கூறிவருகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *