ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியீடு
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம் என்பவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜோ.
இந்த படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 7 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் இருந்தே மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனவும் படம் டிசம்பர் 22-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அறிவித்தது போல படம் வெளியாகவில்லை.
ஏனென்றால், நாட்கள் கடக்க கடக்க படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜோ திரைப்படம் வரும் ஜனவரி 15-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.