“என்னை ரஜினி மிகவும் அக்கறையாக பார்த்துக் கொள்வார்” பிரபல நடிகையின் வைரலாகும் பேட்டி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தற்போது பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.
மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார் மாளவிகா மோகன்.
மலையாளத்தில் முதன் முதலில் ‘பட்டம் போல’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். தமிழில் முதன் முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்து காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் பிஸியான நடிகையாகவே இருந்து வருகிறார் மாளவிகா மோகனன்.
இது போன்ற நிலையில் பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை குறித்து சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். அவர் கூறியதாவது, “ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதே என் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. முதல் நாள் படப்பிடிப்பின் போது என்னுடன் நன்றாக பேசினார். இரண்டாவது நாள் என்னை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொண்டார். என் நடிப்பிற்கு கைதட்டிய முதல் ஆள் ரஜினி தான்” என்று பெருமையாக பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.