ரூ.1000 + 6000 + 1000.. அடுத்தடுத்து கொட்டும் பணமழை! ஸ்டாலின் இறக்கிய திட்டம்! திமுக எடுக்கும் சர்வே
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக பல்வேறு சர்வேக்களை எடுக்க தொடங்கி உள்ளது. அதில் சமீபத்தில் புதிய சர்வே பணிகள் ஒன்று தொடங்கி உள்ளதாம்.
லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது.
சர்வேக்கள்: இந்த நிலையில்தான் கோவை, சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் திமுக சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் முக்கியமான சர்வே ஒன்றை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த சர்வேபடி நேரடியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று சர்வே எடுப்பார்கள்.
அவர்களின் பூர்வீகம், வீடு, நிதி விவரங்களை கேட்பார்கள். இதில் ஜாதி தொடர்பான விவரங்களையும் சேகரிக்க உள்ளனராம். ஜாதி எண்ணிக்கையில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கணக்கெடுப்பை திமுக எடுக்கிறதாம். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதை வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக திமுக இந்த கணக்கெடுப்பை கையில் எடுக்கிறதாம்.
எம்பிக்கள்: லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.
40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலான் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.