மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. கோவையில் மொத்தமாக நிராகரிக்கப்பட்ட 65000 மனுக்கள்.. என்னாச்சு

கோவை: கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மேல் முறையீடு செய்த 66 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சப் கலெக்டர், கோட்டாட்சியர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் வெறும் 954 பேரின் மனுக்களே ஏற்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ம் தேதி முதல் மாதம் மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக அப்போது 4 லட்சத்து 46 ஆயிரத்து 340 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

அதன்பின்னர் நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்துது 20 ஆயிரத்து 414 பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 66ஆயிரத்து 754 -ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் ஏராளமான பெண்கள், தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த காரணத்தால், மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இதனால் கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 66 ஆயிரத்து 301 பெண்கள் மேல்முறையீட்டு மனு அளித்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக பொள்ளாச்சி சப்-கலெக்டர், தெற்கு, வடக்கு கோட்டாட்சியர்கள், மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர்கள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கிறதா?, வருமானவரி செலுத்துகிறார் களா? சொந்த வீடு, நிலம் இருக்கிறதா?, கார் வைத்துள்ளார்களா? என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு சரிபார்த்தார்கள். .இந்தஆய்வுக்கு பிறகு மொத்தம் உள்ள 66 ஆயிரத்து 301 மனுக்களில், 65 ஆயிரத்து 347 மனுக்களை அதிகாரிகள் நிராகரித்தனர். மொத்தம் 66 ஆயிரம் மனுக்களில் 954 பெண்களின் மேல்முறையீடு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டது. அந்த மனுதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தில் யாராவது ஒருவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவராக இருந்தால் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால், 3600 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *