பிட்காயின்: அடுத்த 8 மாதத்தில் 130% லாபம்.. அமெரிக்க அரசு வெளியிட்ட கலக்கல் அறிவிப்பு
அமெரிக்க முதலீட்டு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு உலகின் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் அடிப்படை சொத்தாக வைத்து ETF நிதிகளை வெளியிட அங்கீகரித்துள்ளது.
இதன் மூலூம் 15 வருடமாக உலக மக்களைப் பித்துப்பிடித்து அலைய செய்த கிரிப்டோகரன்சி-க்கான முதலீட்டு வழியைச் சீராக்கியுள்ளது.இத்தகைய ஈடிஎப்களை முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் வெளியிடும் என்பதால் தனியொரு தளத்தில் கணக்கைத் திறக்க வேண்டும், பிட்காயினைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும், வேலெட் திருட்டு, சைபர் அட்டாக் போன்றவை இருக்காது. எப்படிக் கோல்டு ஈடிஎப், பாண்ட் ஈடிஎப் இயங்குகிறதோ அதேபோல் பிட்காயின் ஈடிஎப்-ம் இயங்கும். இதேபோல் மக்கள் நேரடியாகப் பாட்காயினில் முதலீடு செய்யாமல் அதன் விலை பலனை மட்டுமே அனுபவிக்கும் வாய்ப்பு ஈடிஎப் மூலம் கிடைக்கும். இதனால் எல்லோரும் பாதுகாப்பான முறையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வழி வகுக்கும்.பிட்காயின் சார்ந்த ஈடிஎப் அனுமதிக்கு முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த நிலையில் அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) புதன் கிழமையன்று பிட்காயின் ஈடிஎப் தொடர்பான புதிய ப்ராடெக்ட்களைப் பட்டியலிட அனுமதித்து இதற்கான விண்ணப்பத்தை அளிக்கத் துவங்கியுள்ளது.எகிறி அடித்த பிட்காயின்.. 2 வருடத்திற்குப் பின்பு ஜாக்பாட்..! 10க்கும் அதிகமான முதலீட்டு நிறுவனங்கள் பிட்காயின் ஈடிஎப் வெளியிட தயாராகியிருக்கும் வேளையில் BlackRock, Fidelity, Grayscale போன்ற முன்னணி நிறுவனங்களும் SEC அமைப்பிடம் தங்களின் ETF பட்டியலிட விண்ணப்பம் கொடுத்துள்ளது. இதில் வியாழக்கிழமை சில ETF பொதுச் சந்தை வர்த்தகத்திற்கு வர உள்ளது.அமெரிக்காவின் SEC அறிவிப்பைத் தொடர்ந்து பிட்காயினின் விலை $47,500 ஆக உயர்ந்தது, இன்று காலை வர்த்தகத்தில் சரியவும் துவங்கியுள்ளது. இந்த நிலையில் அடித்த சில மாதத்தில் பிட்காயின் ஈடிஎப்-ல் குறைந்தது 50 முதல் 100 பில்லியன் டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டு இதன் விலை 1 லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.