100008 வடை மாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்….. பக்தர்கள் நீ….ண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்… !
வீட்டு பூஜை அறையிலும் அனுமனுக்கு பூஜை செய்யலாம். அந்த நேரத்தில் அனுமன் துதிகள், ஸ்லோகங்கள், அனுமன் சாலீசா சொல்லலாம். அதன் பிறகு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை இவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். அத்துடன் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி மனமுருகி பிரார்த்தனை செய்திட விரைவில் சுபகாரியம் கைகூடும். அத்துடன் அனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை கட்டிப் போட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். பூலோகத்தில் பிறப்பெடுத்த அனைவருமே ஏதோ ஒரு நாளில் இறப்பினை சந்திக்க வேண்டும். அப்படி இறப்பில்லாத வாழ்வு பெற்றவர்கள் ஏழு பேர். அவர்கள் சிரஞ்சீவிகள் . இதில் அண்ணனே ஆனாலும் எதிர்த்து நியாயத்தின் பக்கம் நின்ற விபீஷணன், பெருமாளே ஆனாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மகாபலி, எமனை வென்ற மார்க்கண்டேயன், காவியங்களை படைத்த வியாசர், தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்ற பரசுராமர்,
கடைசி வரை கௌரவர்கள் பக்கமே நின்று போரிட்ட அஸ்வத்தாமன் இந்த வரிசையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை புரிந்த அனுமனுக்கும் சிரஞ்சீவி பட்டியலில் இடமுண்டு. ராவணனை அழிக்க ராமனாக அவதரித்த மகாவிஷ்ணுவுக்கு உதவிபுரிய சிவபெருமான், தன்னுடைய சக்தியை வாயுதேவன் மூலம் அஞ்சனையில் வயிற்றில் உதிக்கச் செய்தார். அவர் தான் வாயுபுத்திரன் அனுமன் என்ற ஆஞ்சநேயர். சீதையால் ‘சிரஞ்சீவியாக இரு’ என்று ஆசீர்வதிக்கப்பட்டவர்.