திதி கொடுத்த பிறகு இதை செய்ய மறக்காதீங்க… !
பலரும், ஏன் அமாவாசையன்று தர்ப்பணம் தருகிறோம் என்று தெரியாமலேயே தருகிறார்கள். சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் புரிந்து கொள்ளுங்கள்.
எல்லோரும் செய்கிறார்களே என்று உங்கள் மூதாதையரிடம் மனம் விட்டு பிரார்த்தனை செய்யாமல் அமாவாசையன்று தர்ப்பணம் தருவதினால் ஒரு பலனும் கிடைக்காது.வருடத்தில் அனைத்து மாதங்களிலுமே அமாவாசை வருகிறது. அனைத்து அமாவாசை தினத்திலும் தர்ப்பணம் தர முடியாவிட்டாலும் 3 அமாவாசை திதிகளிலாவது தர்ப்பணம் தாருங்கள் என்கிறார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவை என்கிறார்கள்.
பொதுவாக அமாவாசை திதியில், முன்னோரை வழிபட்டு, தர்ப்பணம் கொடுத்த பின்பு அவசியம் செய்ய வேண்டிய வழிபாடு அம்பிகை வழிபாடு. அமாவாசை தர்ப்பணம் கொடுத்த பின்னர், அருகில் உள்ள சிவாலயத்திற்கு செல்லுங்கள். சிவனை தரிசித்த பிறகு, உங்கள் மூதாதையர், முன்னோர்களிடம் தர்ப்பணம் தரும் போது என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதையே அம்மாள் முன், தாய் முன்பாக பிள்ளை வரம் கேட்பதைப் போல, உங்கள் வாழ்வு உயர கைக்கூப்பி அவள் பாதம் நோக்கி வணங்குங்கள். அடுத்த அமாவாசை திதிக்குள் உங்கள் பிரச்சனைகள் குறைய துவங்கும்.
அமாவாசை நாட்களில் சந்திரனின் ஒளி பூமியில் படுவதில்லை. இந்த நாளில் மனம் அலைபாய்வதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை குறித்த புரிதல் இருக்கும்.