நெய் மணக்கும் ரவா லட்டு: வெறும் 15 நிமிடத்தில் செய்யலாம்
ஒரு முறை ரவா லட்டு, இப்படி செய்தால் ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் நெய்
15 முந்திரி பருப்பு
10 திராட்ச்சை
1 கப் ரவை
அரை கப் சர்க்கரை
3 ஸ்பூன் நெய் அல்லது 1 கப் பால்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, முந்திரி, திராட்சையை வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் ரவையை கொட்டவும். மெதுவாக தொடர்ந்து கிளரவும். 7 முதல் 8 நிமிடங்கள் வரை கிளரவும். தொடர்ந்து அடுப்பை அணைக்கவும். இனியொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து உருக்கவும். வறுத்த ரவையில் கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து ரவா லட்டை பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.