பெரிய ஷாக்… மஹிந்திரா காரை ஓட்டீட்டு போனது அவரா… வீடியோவை பாத்ததும் நாடே அதிர்ச்சியில் ஒறஞ்சு போயிருச்சு!
இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறாமல், வாகனங்களை இயக்குவது சட்ட விரோதம் ஆகும். இதற்கு அபராதம் (Fine) உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளால் எடுக்க முடியும். ஆனால் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலேயே பலர் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர்.
இதை விட கொடூரம் என்னவென்றால், உரிய வயதை எட்டுவதற்கு முன்பாகவே, குழந்தைகளும் கூட வாகனங்களை இயக்குவதுதான். இத்தனைக்கும் பெற்றோர்களே குழந்தைகளை வாகனங்களை ஓட்டுவதற்கு ஊக்குவிக்கின்றனர். ஒரு சில பெற்றோர்கள் இதில் உள்ள ஆபத்தை உணராமல், வெறும் பெருமையாக மட்டும் கருதுவதுதான் இதற்கு காரணம்.
கடந்த காலங்களில் குழந்தைகள் வாகனங்களை ஓட்டும் வீடியோக்கள் பல முறை வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளி வந்துள்ள ஒரு வைரல் வீடியோ (Viral Video) கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் நாம் காணும் காட்சிகள், பெரியவர்களுக்கு பொறுப்பின்மை அதிகரித்து வருவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்த வைரல் வீடியோ பெங்களூர் (Bangalore) நகரில் எடுக்கப்பட்டதாகும். அங்குள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சாலையில், சிறுவன் ஒருவன் மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை இயக்குவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த சிறுவன் காரை தானே முழுமையாக இயக்கவில்லை. மாறாக பெரியவர் ஒருவர் உதவி செய்கிறார். அனேகமாக அந்த பெரியவர் அந்த சிறுவனின் தந்தையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த பெரியவரின் மடியில் அமர்ந்து கொண்டு, சிறுவன் ஸ்டியரிங் வீலை கண்ட்ரோல் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
அனேகமாக பிரேக் மற்றும் ஆஸ்ஸலரேட்டர் போன்ற பெடல்களை, அந்த பெரியவர் கட்டுப்படுத்தியிருக்கலாம். சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்ததே தவறு எனும்போது, இந்த பெரியவர் அதை விட பெரிய தவறு ஒன்றையும் செய்துள்ளார். சாலை மிகவும் பரபரப்பாக இருப்பதை இந்த வீடியோவிலேயே நம்மால் பார்க்க முடிகிறது.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில், இது போன்ற செயல்களை துணிச்சல் என்ற பெயரில் செய்வது நிச்சயமாக தவறான ஒரு விஷயம்தான். எனவே சமூக வலை தளங்களில் இந்த வீடியோவிற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்த அந்த பெரியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.