மொறு மொறு முந்திரி பக்கோடா: இப்படி ஒரு முறை செய்து பாருங்க
இப்படி முந்திரி பக்கோடா செய்தால் செம்ம சுவையாக இருக்கும் .
தேவையான பொருட்கள்
முந்திரி – 250 கிராம்
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
சோம்புத் தூள்- ¼ டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிற அளவு
உப்பு
பெருங்காயம் ஒரு சிட்டிகை
எண்ணெய் பொறிக்கும் அளவு
செய்முறை : கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு பொடி, உப்பு, மிளகாய் பொடி கருவேப்பிலை, சூடான எண்ணெய், தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும். தொடர்ந்து பெருங்காயம், முந்திரி, தண்ணீர் சேர்த்து மாவை கலக்க வேண்டும். இன்னும் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அடுப்பில் எண்ணெய் சூடானதும், முந்திரி பக்கோடாவை உதரி, உதரியாய் சேர்த்து பொறித்து எடுக்கவும்.