ஃபுல்லா சார்ஜ் பண்ணா இவ்ளோ தூரம் போகலாமா! மஹிந்திரா எக்ஸ்யூவி400 ப்ரோ ரேஞ்ஜ் இ-கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி400 ப்ரோ ரேஞ்ஜ் (Mahindra XUV400 Pro Range) எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. மேலும், என்ன மாதிரியான வேரியண்டுகளில் இது விற்பனைக்கு கிடைக்கும் என்கிற தகவலையும் இந்த பதிவில் காணலாம், வாங்க.
இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான மஹிந்திரா எக்ஸ்யூவி400 ப்ரோ ரேஞ்ஜ் (Mahindra XUV400 Pro Range) எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் மாடலாகும். ஈசி ப்ரோ (EC PRO) மற்றும் ஈஎல் (EL PRO) என்கிற இரண்டு விதமான தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
இதில் இஎஸ் ப்ரோவில் மட்டுமே இரண்டு விதமான ஆப்ஷன் கிடைக்கும். ஒன்றில் 34.5 kWh பேட்டரி பேக்கும், மற்றொன்றில் 39.4 kWH பேட்டரி பேக் தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது. இந்த இரண்டும் 7.2 kW ஏசி சார்ஜர் டைப் வசதிக் கொண்டவை ஆகும்.
ஆரம்ப நிலை தேர்வான இசி ப்ரோவில் 34.5 kWH பேட்டரி பேக் ஆப்ஷனும், டைப் 3.3 kW ஏசி சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 15.49 லட்சம் ஆகும். மற்றவை ரூ. 16.74 லட்சம் – ரூ. 17.49 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இதில், எக்ஸ்யூவி400 இஎல் ப்ரோவிலேயே மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மிக முக்கியமாக டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. கிரே மற்றும் பிளாக் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், இந்த உயர்நிலை தேர்வை கூடுதல் பிரீமியம் தோற்றம் கொண்டதாக காண்பிக்க சேடின் காப்பர் ஆக்செண்டுகள், சேடின் குரோமால் அலங்கரிக்கப்பட்ட ஏசி வெண்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதே நிறம் கொண்ட அலங்கார பொருட்களே கியர்பாக்ஸ் மற்றும் கிளைமேட் கன்ட்ரோக்ளிலும் காட்சியளிக்கின்றன. இதன் இருக்கைகள் கிரே நிற லெதர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் காப்பர் நிற தையல்களால் தைக்கப்பட்ட லெதர் உறைகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன் மிக பெரிய மாற்றமாக இந்த காரில் 7 அங்குல தொடுதிரைக்கு பதிலாக 10.25 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக சிறப்புமிக்க பயன்பாட்டு வசதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இந்த உயர்நிலை தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும். இது நேவிகேஷன், மல்டிமீடியா தகவல் மற்றும் டிரைவர் அசிஸ்டன் டேடா ஆகியவற்றை வழங்கும் திறன் கொண்டது. இதுபோன்று இன்னும் பல நவீன மற்றும் பிரீமியம் தர அம்சங்களை எக்ஸ்யூவி400-இன் உயர்நிலை தேர்வில் மஹிந்திரா வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 50க்கும் மேற்பட்ட இணைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டயர் பிரஷ்ஷர் அலர்ட், கதவை திறக்கும் அலர்டு, ஓவர் ஸ்பீடு அலர்ட், ஜியோ ஃபென்ஸ் அலர்ட், அதிக டெம்ப்ரேச்சர் எச்சரிக்கும் வசதி, சார்ஜரில் ஏற்படும் பிரச்னைகளை குறிக்கும் அலர்ட், இ-கால், ரோட் சைடு அசிஸ்டன்ஸ், வேலட் மோட், ஜஸ்ட் டயர், ஆக்யூவெதர், ஷேர் மை லொகேஷன் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. சிறப்பம்சங்களில் மட்டுமில்லைங்க ரேஞ்ஜ் தருவதிலும் இந்த கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இதன் 39.4 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ ரேஞ்ஜையும், 34.5 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 375 கிமீ ரேஞ்ஜையும் தரும். மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.
ஃபன், ஃபாஸ்ட், ஃபியர்லெஸ் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், பாதுகாப்பு அம்சங்களும் மிக அதிகளவில் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. 6 ஏர் பேக்குகள், இஎஸ்பி, டிபிஎம்எஸ், ஆட்டோ டிம்மிங் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக், ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்டவை எக்ஸ்யூவி 400 காரில் வழங்கப்பட்டு உள்ளன.