IND vs AFG: கேப்டனாக ரோகித்; கோலி இல்லை; சஞ்சு-வுக்கு பதில் ஜிதேஷ் – இந்தியா ஆடும் லெவன் இழுபறி!
India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் 6 மாதங்களுக்குள், இந்தியா தனது கடைசி டி20 தொடரை விளையாடுகிறது. இந்தியா கடைசியாக, அண்மையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மற்ற 2 போட்டிகளை இரு அணிகளும் தலா ஒன்றை வென்றன. இதனால் தொடர் சமனில் முடிந்தது.
இந்தியா ஆடும் லெவன் எப்படி இருக்கும்?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் முழுநேர கேப்டன் ரோகித் அணியை வழிநடத்துவார் மற்றும் மூன்று ஆட்டங்களுக்கும் தொடக்க வீரராக இருப்பார். ருதுராஜ் கெய்க்வாட் இல்லாததே ரோகித் அணிக்கு திரும்புவதற்கு காரணம் என பேசப்படுகிறது.
கோலிக்குப் பிறகு, எல்லா நேரத்திலும் இரண்டாவது அதிக டி20 ரன்களை அடித்தவர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை 29 அரை சதங்களுடன் ரோகித் டி20-யில் சதங்களை அடித்துள்ளார். இந்தியா யாரை அவரது பார்ட்னராக களத்திற்குள் அனுப்பப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.