லண்டன் வீதியில் திடீரென பேருந்து தீப்பற்றியதால் புகைமண்டலமான பகுதி! வெளியான பரபரப்பு வீடியோ காட்சிகள்
பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் டபுள் டெக்கர் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் விம்பிள்டன் மையப்பகுதியில் இன்று காலை, மின்சார டபுள் டெக்கர் பேருந்து ஓன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் பெரும் சத்தம் எழுந்ததுடன், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த லண்டன் தீயணைப்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்தது.
விம்பிள்டன் ஹில் ரோடு பகுதியளவு தடுக்கப்பட்டது மற்றும் விம்பிள்டன் கிராமம் தெற்கு மற்றும் பிராட்வே நார்த்பவுண்ட் வரை நெரிசல் ஏற்பட்டது.
#Wimbledon pic.twitter.com/4EuVWTmIoK
— Bean2k22 (@StevenW65432097) January 11, 2024
இந்த தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை என லண்டன் தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், Merton காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று காலை விம்பிள்டன் ஹில் ரோடு பகுதியைத் தவிர்க்குமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துகிறது. வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு திசைகளிலும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் நெரிசல் ஏற்படும். எனவே விம்பிள்டன் ஹில் ரோடு பகுதியை தவிர்க்கவும்’ என கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், விம்பிள்டன் ஹில் ரோடு மற்றும் Alwyne Road-யில் சிவப்பு டபுள் டெக்கர் பேருந்தில் இருந்து புகை மேகங்கள் வெளியேறுவதைக் காட்டியது.
அப்போது, ”பெரிய சத்தம் கேட்டது, நாங்கள் பயந்துபோனோம்” என உள்ளூர்வாசியான மேக்ஸ் பாஷ்லே தெரிவித்தார். இதற்கிடையில் பேருந்து தீப்பிடித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.