IND vs AFG : மொஹாலி மைதான பிட்ச் ரிப்போர்ட்.. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்? மழைக்கு வாய்ப்பு?
மொஹாலி: இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள மொஹாலி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம்.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. மொஹாலி மைதானத்தில் நடக்கவுள்ள முதல் டி20 போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரமாக இருக்கின்றனர். இந்த தொடருக்காக 14 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர்.
ஆனால் சொந்த காரணங்களால் முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானும் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்தே விலகியுள்ளார். இருப்பினும் உலகக்கோப்பை தொடரை போல் ஆஃப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்க உள்ளது.