IND vs AFG பிளேயிங் 11 – விலகிய கோலி.. விக்கெட் கீப்பர் இடத்துக்கு கடும் போட்டி.. ரோஹித் அதிரடி
மும்பை : இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11 குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஓராண்டுக்கு பின் டி20 அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அவர்கள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விராட் கோலி முதல் டி20யில் மட்டும் ஆட முடியாது என அணி நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார். எனவே, அவர் இல்லாமல் தான் இந்திய அணி முதல் டி20 போட்டியில் ஆட உள்ளது.
ரோஹித் சர்மா வந்து விட்டதால் அவர் துவக்க வீரராக ஜெய்ஸ்வாலுடன் களமிறங்குவார். விராட் கோலி களமிறங்கும் மூன்றாம் வரிசையில் சுப்மன் கில் முதல் டி20யில் மட்டும் ஆட உள்ளார். சூர்யகுமார் யாதவ் காயத்தில் சிக்கி ஓய்வில் இருக்கும் நிலையில், அவர் களமிறங்கும் நான்காம் வரிசையில் திலக் வர்மா பேட்டிங் செய்ய உள்ளார்.
அடுத்து ஐந்தாம் இடத்தில் அதிரடி மன்னன் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய இருக்கிறார். ஆறாம் இடத்தில் விக்கெட் கீப்பர் ஒருவர் களமிறங்க வேண்டும் என்ற நிலையில், கடந்த ஆஸ்திரேலிய டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஜிதேஷ் சர்மாவை களமிறக்குவதா அல்லது நீண்ட காலம் கழித்து டி20 அணிக்கு திரும்பி இருக்கும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.