ஐடி ஊழியர்கள் குழப்பம்.. அடுத்தடுத்து HR உயர் அதிகாரிகள் மாற்றம் ஏன்..? உண்மை என்ன..?!
இந்தியாவின் முன்னணி ஐடி, டெக், டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக உயர் அதிகாரிகள் வெளியேறுவது வடிக்கையாகிவிட்டது.
இதனால் CXO பிரிவு ஊழியர்களுக்கான தேவை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது, குறிப்பாக டெக் மற்றும் அதைச் சார்ந்த துறையில் அதிகப்படியான மாற்றங்கள் நடந்து வருகிறது.இதில் கவனிக்கப்பட முக்கியமான விஷயம் என்னவென்றால் HR பிரிவின் உயர் அதிகாரிகள் எப்போதும் இல்லாமல் அதிகளவில் மாறி வருகின்றனர். இந்திய டெக் மற்றும் ஸ்டார்ட்அப் துறையில் அதிகப்படியான பணிநீக்கம், பிரஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்புக் குறைப்பு, பிரஷ்ஷர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது, உயர் அதிகாரிகள் அதிகளவில் வெளியேறி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் HR உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியை ராஜினாமா செய்தும், புதிய அதிகாரிகள் வருவதும் தற்போது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.பொதுவாக நிறுவனங்களில் ஊழியர்கள் மாறுவது இயல்பாக இருந்தாலும், உயர் அதிகாரிகள், அதாவது ஒரு பிரிவுகள் தலைவர், துணைத் தலைவர், சிஇஏ, CXO அதிகாரிகள் அடிக்கடி மாறுவது கிடையாது. ஆனால் 2023ல் அது எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.உதாரணமாக இன்போசிஸ் HR பிரிவு உயர் அதிகாரியாக இருந்த ரிச்சர்ட் லோபோ ஆகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த வேளையில், சில மாதம் பைஜூஸ் நிறுவனத்திற்கு உதவிவிட்டு பின்னர் டெக் மஹிந்திராவில் CPO எனபடும் தலைமை மக்கள் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.FreshWorks: இதேபோல், சென்னையில் இருந்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் அதன் HR தலைவர் சுமன் கோபாலன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு உடனடியாக ஜோஹன்னா ஜாக்மேன் இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.பிளிப்கார்ட்: இந்திய ஈகாமர்ஸ் துறையைப் புரட்டிப்போட்ட Flipkart, அதன் HR தலைவர் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தது. இந்த நிறுவனம் விரைவில் புதிய அதிகாரியின் பெயரை அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.Wipro: பிரபல மிட்கேப் ஐடி சேவை நிறுவனமான Mphasis கடந்த ஆண்டு அக்டோபரில் அதன் புதிய உலகளாவிய தலைமை மனித வள அதிகாரியாக அயஸ்கந்த் சாரங்கி என்பவரை நியமித்தது. எம்பாசிஸில் சேருவதற்கு முன்பு அயஸ்கந்த் சாரங்கி, விப்ரோ எண்டர்பிரைசஸில் CHRO ஆகப் பணியாற்றினார்.Cognizant: இன்போசிஸ் , விப்ரோ நிறுவனத்திலிருந்து அதிகப்படியான ஊழியர்களை ஈர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்ட காக்னிசென்ட்டின் தலைமை மக்கள் அதிகாரி பெக்கி ஷ்மிட் ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்த பிறகு, கேத்ரின் டயஸை என்பவரை அதன் CPO ஆக நியமித்தது.Infosys: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மனித வளம் பிரிவின் முன்னாள் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்திச் சங்கர் ஓய்வு பெற்ற நிலையில், மற்றும் இன்ஃபோசிஸ் ஷாஜி மேத்யூவை மனித வள மேம்பாட்டுக் குழுவின் தலைவராக மாற்றினார்.