மாதம் ரூ.1000 முதலீடு; ₹.5 லட்சம் ரிட்டன்: போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டம் தெரியுமா?
Public-provident-fund | போஸ்ட் ஆபீஸ் பி.எப் திட்டம் இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது ஆகும்.
இந்தத் திட்டம், முதிர்வு காலத்தில் பணத்தைக் குவிக்க உதவுகிறது.
மேலும், பொது வருங்கால வைப்பு தொகை (PPF) என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் அஞ்சல் அலுவலகத் திட்டமாகும், இது 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இது வரி விலக்கு, உத்தரவாத வருமானம், உறுதி செய்யப்பட்ட வருமானத்தை வழங்குகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
PPF பகுதியளவு திரும்பப் பெறும் வசதியும் கொண்டுள்ளது. நீண்ட கால முதலீட்டை எதிர்பார்க்கும் நபர்கள் நல்ல வருமானத்தைப் பெற அதைத் தேர்வுசெய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பிபிஎஃப்-ன் சிறப்பு, வட்டி மற்றும் புகழ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த திட்டம் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களே விளக்குகின்றன. ஆனாலும், ஒரு சராசரி முதலீட்டாளர் பெரும்பாலும் அறியாத பல விஷயங்கள் இத்திட்டத்தில் உள்ளது.
மேலும், உங்கள் முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு மேல் நீட்டித்தால், உங்கள் பணம் வேகமாக அதிகரிக்கும்.
ரூ.1000 முதலீடு செய்தால்..
இத்திட்டத்தில் மாதந்தோறும் நீங்கள் ரூ.1000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் பணம் ரூ.71806 ஆக வளரும். வட்டியாக மட்டும் ரூ.11806 கிடைக்கும்.
இதே தொகை 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 990 ஆக இருக்கும். வட்டி ரூ.52,990 ஆக இருக்கும்.
15 ஆண்டுகள் என்று கணக்கீட்டால் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 568 கிடைக்கும். வட்டி மட்டும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 568 ஆக இருக்கும்.
20 ஆண்டுகள் என்று வரும்போது ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 479 கிடைக்கும். வட்டியாக மட்டும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 479 கிடைத்திருக்கும்.