BJP: ‘பாஜக பதில் சொல்லணும்’ திருவாரூர் பாஜக மகளிரணி முன்னாள் மாவட்ட தலைவி!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து திருவாரூர் மாவட்ட பாஜக மகளிரணி முன்னாள் மாவட்ட தலைவி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக உள்ள முத்துப்பேட்டை ராஜேந்திரன் என்பவர் வேலை வாங்கி தருவதாக ராம் குமார் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் வாங்கி ஏமாற்றிய புகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், மேலும் சிலரிடம் ராஜேந்திரன் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் பாஜ மகளிரணி முன்னாள் மாவட்ட தலைவியான சுதந்திரதேவி என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட் டுள்ளார். அதில் “இதுதான் உன்னுடைய முத்துப்பேட்டை அரசியலா.?அரசியலே என்னனு தெரியாத உனக்கு அவ்வளவு திமிரா.? பொதுமக்களிடம் லோன் வாங்கி தரேன், வேலை வாங்கி தரேன் என்று பணம் வாங்கி சாப்பிட்டுள்ளீர்கள். எத்தனை பேர் இதேபோன்று கிளம்பியுள்ளீர்கள்.
நீங்கள் எல்லாம் என்ன பணியாளர் மற்றும் தேர்வாணையத்தின் முதன்மை செயலரா.?அந்த அளவுக்கு பவுர்புல் ஆகிட்டீங்களா.? தமிழ்நாட்டில் இன்னும் நீங்கள் கால் ஊன்றவே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா.? கால் ஊனாத போதே இதுபோன்று மக்களை ஏமாற்றி சம்பாதித்து வருகிறீர்கள். உங்களுக் கெல்லாம் வெட்கமாக இல்லையா.? இதற்கெல்லாம் பாஜ கட்சி பதில் செல்லியே தீரவேண்டும்.
நீங்கள் எது செய்தாலும் கவனித்துகொண்டே இருப்பேன். கேள்வி கேட்பேன். அதற்காக தான் வேறு கட்சிக்கு செல்லாமல் இருந்து வருகிறேன். உங்கள் மாநில தலைவர் அண்ணாமலை ஜபிஎஸ் தானே. அவரிடம் கூறி தலைமை செயலாளரிடம் சொல்லி முடிந்தால் வெளியே வந்து காட்டு எங்களையெல்லாம் இழிவாக நடத்தியதற்கு உனது விக்கெட் விழுந்துவிட்டது. வாழ்த்துக்கள் என அந்த வீடியோவில் பேசி உள்ளார்.