80வயதுமிக்க தந்தைக்கு 7கோடி ரூபா காரை பரிசளித்த தொழிலதிபர்.. இது காரா இல்ல உல்லாச கப்பலா! கொடுத்து வச்ச அப்பா!
இந்தியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களில் யோஹன் பூனவல்லா-வும் ஒருவர் ஆவார். பூனவல்லா இன்ஜினியரிங் குழுமத்தின் சேர்மேன் இவரே ஆவார். இவரே அவருடைய 80 வயது உள்ள தந்தைக்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புமிக்க சொகுசு காரை பரிசாக வழங்கி இருக்கின்றார்.
பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் ஸ்பீடு (Bentley Flying Spur Speed) எனும் சொகுசு காரையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த காரை சமீபத்திலேயே அவர் டெலிவரி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அந்த காரை அவர் அவருடைய தந்தைக்காக வாங்கி இருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கின் வாயிலாக இந்த பரிசளிப்பை தொழிலதிபர் யோஹன் பூனவல்லா உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், வீடியோவை பரிசளிக்கும் முன், காரை அழகாக அலங்கரித்திருந்ததையும் அந்த வீடியோ வாயிலாக அவர் காண்பித்திருக்கின்றார். தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டே இந்த கார் பரிசளிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
டிராகன் ரெட் II (Dragon Red II) நிறத்தில் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிறமே அதன் அழகிய தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன், இன்னும் பல்வேறு அலங்கார வேலைகளை இந்த காரில் பென்ட்லீ செய்திருக்கின்றது.
மிக முக்கியமாக காரின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் என இரண்டிலும் குரோம்-சில்வர் நிற அலங்கார பொருட்களால் அது அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நபர்களில் யோஹன் பூனவல்லாவும் ஒருவர் ஆவார்.
இவர் ஒரு தீவிர கார் சேகரிப்பாளர் ஆவார். இவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காகவே அவருக்கு சமீபத்தில் கத்தாரில் நடைபெற்ற ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் “2023 ஆம் ஆண்டின் சிறந்த கார் சேகரிப்பாளர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
இந்த மாதிரியான நபரே தன்னுடைய தந்தைக்கு விலை உயர்ந்து காரை பரிசாக வழங்கி அழகு பார்த்திருக்கின்றார். அவர் பரிசாக வழங்கி இருப்பது வழக்கமான வெர்ஷன் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் அல்ல என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. வழக்கமான பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மாடலைவிட அதிக பவர்ஃபுல்லான வேரியண்டே இதுவாகும்.
இதனால்தான் இதன் விலையும் மிக அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் டபிள்யூ12 சூப்பர் லிமோ சிறப்பு பதிப்பே அது ஆகும். இது ஓர் நான்கு கதவுகள் கொண்ட மிகவும் நீளமான அமைப்புடைய சொகுசு செடான் ரக கார் மாடல் ஆகும்.
இந்த காருக்கு கவர்ச்சியளிக்கும் விதமாக 22 அங்குல பெரிய அலாய் வீல், பெரிய கிரில், பெரிய துளைகள் கொண்ட ஏர் இன்டேக் துவாரம் (குரோம் அணிகலனால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்), எல்இடி லைட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, சாய்வான மேற்கூரை, அக்காருக்கு இன்னும் பிளஸ்ஸாக இருக்கும் வகையில் உள்ளது.
இத்துடன் கூடுதல் சிறப்பம்சங்களாக, அதிக சொகுசான இருக்கைகள், பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உட்பட பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் அதிக அழகான கார் மட்டுமல்ல, அதிக செயல்திறனை வெளிப்படுத்தும் கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இந்த காரில் 6.0 லிட்டர் டபிள்யூ 12 டர்போசார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 635 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும். இசட்எஃப் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் வெறும் 3.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
View this post on Instagram