விஜயகாந்த் 100 முறைக்கு மேல் பார்த்த ‘அந்த’ நடிகரின் படம்! யார் படம் தெரியுமா?

ரசிகர்களால், ‘புரட்சி கலைஞர்’ என அழைக்கப்படும் இவரது மறைவு, தமிழக மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

மறைவு பின்னர், பெரும் துயரில் இருந்த தமிழக மக்களை அவரை அடக்கம் செய்து வைத்துள்ள இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வந்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

அரசு மரியாதையுடன் தே மு தி க தலைவர் விஜயகாந்தின் உடலானது டிசம்பர் 29ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.மேலும் இதனை தொடர்ந்து திரை உலகை சேர்ந்த பலரும் விஜயகாந்தின் சமாதிக்கு வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகினர். விஜயகாந்த் மறைத்ததற்கு பின் அவரை பற்றி மக்களுக்கு தெரியாத நிறைய விஷயங்கள் வெளியாகி உள்ளன.

அப்படி வெளியான விஷயங்களில் வெளியான ஒரு விஷயம் நடிகர் விஜயகாந்த், நடிகர் MGR படத்தை 100 முறை பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் அப்படி 100 முறைக்கு மேல் பார்த்த படம் என்ன தெரியுமா?

ரசித்து பார்த்த திரைப்படங்கள்:

மதுரையில் ரைஸ் மில் நடத்தி வந்த நடிகர் விஜயகாந்த் ஒரு பெறிய MGR ரசிகர் ஆவர். எம்ஜிஆரின் பல படங்களை பார்த்து வளர்ந்த அவருக்கு, சினிமாவில் அன்றைய உச்ச நடிகராக இருந்த ரஜினியின் வளர்ச்சியை பார்த்து சினிமாவில் நடிப்பதற்கு ஆசை வந்துள்ளது.

நடிகர் விஜயகாந்த் பலவருடத்திற்கு முன் ஒரு பேட்டியில் பேசியபோது. ” என் வீட்டுக்கு அருகே எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படம் ஓடியது,அந்த படத்தில் வரும் சண்டை கட்சிக்காகவே நான் அந்த படத்தை 120 முறை பார்த்தேன். அதன்பிறகு MGR நடித்த அரசிளங்குமாறி, நாடோடி மன்னன் போன்ற படங்களில் வரும் சண்டை காட்சிகள் அதற்கு பின்னர் வந்த படங்களில் இல்லை என நினைத்த போது வந்த படம் தன் ஆயிரத்தில் ஒருவன்” என்று கூறியுள்ளார். அப்படத்தை தான் 70 முறை பாத்ததாக கூறியுள்ளார். மேலும், தான் MGR ரசிகன் இல்லை வெறியன் என்றும் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் மறைவால் வாடிய திரை பிரபலங்கள்-ரசிகர்கள்:

நடிகர் விஜயகாந்தின் இறப்பு, தமிழகத்திற்கே பேரிழப்பாக பார்க்கப்பட்டது. தமிழ் திரையுலகில், விஜயகாந்தால் பல நடிகர்களும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வளர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் விஜயகாந்தின் இறப்பின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *