நடிகை அமலா பால் திருமணத்துக்கு முன் கர்ப்பம்? பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை தகவல்… !
நடிகை அமலா பால் அக்டோபர் 7,2023ல் தான் 2வது திருமணம் செய்து கொண்டார். புத்தாண்டுக்கு கணவருடன் ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.
அதனையடுத்த நடத்திய போட்டோஷூட்டில் வயிறு பெரிதாக இருப்பதை காட்டி கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், திருமணத்துக்கு முன்னர் அமலா பால், ஜெகத் தேசாய் உடன் லிவிங் டுகெதராக வாழ்ந்து வந்தார். கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருவேளை அது நடந்து கர்ப்பம் ஆகியிருப்பாரோ என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இந்த தகவல் ரசிகர்கள், திரையுலகினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதல்… அப்புறமா கல்யாணம்… அதன் பின்னர் விவாகரத்து என்று நடிகை அமலாபால் வாழ்க்கையில் எத்தனைத் திருப்பங்களில் அடுத்தடுத்து சந்தோஷங்கள் தலைதூக்கியதோ அதே அளவுக்கு சர்ச்சைகளும், சோதனைகளும் சுழன்றடித்தன. விவாகரத்துக்குப் பின்னர், படங்களில் தாராளம் காட்டி, ஆபாச நடிகை லெவலுக்கு இறங்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன் பின்னர் ரெண்டு, மூணு காதல்களும் அமலாபால் வாழ்க்கையில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், உருப்படியாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமணமாகி இரண்டு மாதங்களில் நடிகை அமலாபால் தான் அம்மாவான செய்தியை சந்தோஷமாக ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தெரிவித்துள்ளார்.