குளுக்கோஸ் ஸ்டேண்டாக பயன்படும் மாப் குச்சி.. கடும் சர்ச்சைக்குள்ளான அரசு மருத்துவமனையின் நிலைமை..!!
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவப் பிரிவு, நுண்கதிர் பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பியல் துறை, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, காது, மூக்கு, தொண்டைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் இந்த காய்ச்சல் வார்டுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குளுக்கோஸ் ஏற்றுவதற்கான ஒரு சிறப்பு நிலைப்பாடு படுக்கைக்கு அருகில் நிறுவப்படவில்லை. இதனால், தரையை துடைக்க பயன்படுத்தப்படும் துடைப்பம், கட்டிலில் கட்டப்பட்டு, ஸ்டாண்டாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில இடங்களில் சுவிட்சுகள் தொங்குவதால், நோயாளிகள் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், காய்ச்சல் வார்டில் போதிய உபகரணங்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டு வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.