‘ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது’..!! ‘இனிமே இதுதான் நடக்கும்’..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் முடிவடையும். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு விடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட இந்த பருவநிலையில் வரலாறு காணாத கனமழை வட மற்றும் தென் மாவட்டங்களில் பெய்தது. இதனால் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜனவரி 15ஆம் தேதியுடன் உடன் இந்த மழையின் தீவிரம் குறையத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் விடைபெறும் தருவாயில் வந்துவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி வரை நீடிக்கும் என ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்களில் பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.