ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய இமேஜ்கள் வெளியானது- இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் விவரங்கள் உள்ளே!
இந்திய கார் ஆர்வலர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் என்ற பெரிய அறிமுகத்துடன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டை உற்சாகமாக தொடங்க இருக்கிறது. 2024 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை வரும் ஜனவரி 16, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதன் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்த காரானது இமேஜ் மூலம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆம், ஜனவரி 16-ம் தேதிக்கு முன்னதாகவே ஹூண்டாய் நிறுவனம் இந்த எஸ்யூவி-யின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரின் பெரும்பாலான விவரங்களையும், இதனை வெளிப்படுத்தும் சில இமேஜ்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட 2024 Hyundai Creta கார் மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ் மற்றும் வரவிருக்கும் டாடா கர்வ் காருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா (Creta) கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி-யாக இருக்கிறது . கடந்த 2023-ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாராவின் 1,13,387 யூனிட்ஸ்களையும் மற்றும் கியா நிறுவனம் தனது செல்டோஸின் 1,04,891 யூனிட்ஸ்களையும் விற்றுள்ள நிலையில் கிரெட்டாவின் 1,57,311 யூனிட்ஸ்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 2024 ஹூண்டாய் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனுக்கான புக்கிங்ஸ் ஏற்கனவே ரூ.25,000-க்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டீரியர்:
புதிய பாராமெட்ரிக் பிளாக் குரோம், குவாட்-பீம் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி horizon பொசிஷனிங் லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்-ஸ், கனெக்டட் எல்இடி horizon டெயில்-லேம்ப்ஸ், இன்டகிரேடட் எல்இடி ஸ்டாப் லேம்ப்புடன் கூடிய ஸ்பாய்லர், ரீடிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், ADAS தொழில்நுட்பத்திற்காக ரேடார் சென்சார் கொண்ட ரீடிசைன் செய்யப்பட் பம்பர், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ஃபங்ஷனல் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் புதிய டூயல்-டோன் அலாய் வீல்கள் என 2024 ஹூண்டாய் கிரெட்டாவின் வெளித்தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.
2024 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் இன்டீரியர்:
உட்புற தோற்றத்தை பொறுத்த வரையில் இன்டீரியரில் 10.25-இன்ச் இன்டகிரேடட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட ஆகியவை கொண்ட புதிய டேஷ்போர்டு காணப்படுகிறது. புதிய லெதரெட் (leatherette) சீட்கள், டோர் ஆர்ம்ரெஸ்ட் கவரிங் மற்றும் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங், லெதரெட் சுற்றப்பட்ட கியர் ஷிஃப்டர், ஃப்ரன்ட் வென்டிலேட்டட் சீட்ஸ், 8-வே பவர் டிரைவர் சீட், சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைன்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல், 8 ஸ்பீக்கர்களை கொண்ட Bose பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ஏர் ப்யூரிஃபையர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் என புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் கேபின் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
கிரெட்டாவின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்ஸ், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற 36 நிலையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன் டாப்-ஸ்பெக் வகைகளில் 19 அம்சங்களுடன் லெவல் 2 ADAS (ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ்) கொடுக்கப்பட்டுள்ளது.
2024 ஹூண்டாய்கிரெட்டா எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்:
வரவிருக்கும் புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரில் 3 எஞ்சின் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். 115PS பவர் மற்றும் 144Nm பீக் டார்க்கை வெளிப்படுத்த கூடிய 1.5-லிட்டர் MPi பெட்ரோல் எஞ்சின், 160PS பவர் மற்றும் 253Nm பீக் டார்க்கை வெளிப்படுத்த கூடிய 1.5-லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5-லிட்டர் U2 CRDi டீசல் எஞ்சின் என 3 எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கும்.அதே போல 6-ஸ்பீட் MT, IVT, 7-ஸ்பீட் DCT மற்றும் 6-ஸ்பீட் AT என மொத்தம் 4 ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும்.
இதில் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் எஞ்சின் 6-ஸ்பீட் MT அல்லது IVT ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படலாம். அதே நேரம் 1.5 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் 7-ஸ்பீட் டிசிடி ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது. 1.5 லிட்டர் U2 CRDi டீசல் எஞ்சின் 6-ஸ்பீட் MT மற்றும் 6-ஸ்பீட் AT என 2 ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும். E, EX, S, S(O), SX, SX Tech மற்றும் SX(O) என மொத்தம் 7 வேரியன்ட்ஸ்களிலும், 28 விதமான ட்ரிம், எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் சேர்க்கையிலும் இந்த கார் கிடைக்கும்.