இவருடைய யூடியூப் சேனலுக்கு 14,00,000 சப்ஸ்கிரைபர்கள்; இவரது சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா?
சமீப வருடங்களாக உலகம் முழுதும் பலரும் யூடியூப் மூலம் சம்பாதித்து வருவதை பார்க்க முடிகிறது. சிறிய கிராமத்தில் இருந்து கூட தங்களது யூடியூப் வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் உள்ளார்கள்.
ஆரம்பத்தில் தங்கள் ஆர்வத்தை மட்டுமே முதலீடாக போட்டு சிறிய அளவில் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருக்கும் யூடியூபர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். சிலர் உலகம் முழுவதும் பயணித்து நாம் எளிதில் காண முடியாத இடங்களை வீடியோவாக பதிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ நாம் ரசிக்கும் வகையில் சமையல் வீடியோ பதிவிடுகிறார்கள்.
அப்படியொரு யூடியூப் செஃப் பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம். இந்த புது வருடத்திற்கு புதிதாக என்ன சமைக்க வேண்டும் என தெரியவில்லையா? கவலையே வேண்டாம். இவர் உங்களுக்கு உதவுவார். ஆமாங்க, யூடியூபில் 14 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் இயங்கி வரும் நிஷா மதுலிகா, தனது புதுமையான சமையல் வீடியோ மூலம் பலரது மனங்களை கவர்ந்துள்ளார்.
தனது வீடியோ மூலம் தனக்கென்று தனித்துவமான நற்பெயரை சம்பாதித்துள்ளார் நிஷா. 2007-ம் ஆண்டில் 54 வயதாக இருந்த நிஷா, அந்த சமயத்திலேயே தன்னுடைய பெயரில் இணைதளம் ஒன்றை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் 2011-ம் ஆண்டு தனது யூடியூப் சேனலை தொடங்கினார். நமக்கு எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டே அற்புதமான உணவுகளை சமைப்பதில் வல்லவர் நிஷா. தற்போது வரை 2,200 வீடியியோக்களை யூடியூபில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் மிகவும் பிரபலமான சமையல் கலைஞராக அறியப்படும் நிஷாவின் பெயர் சமீபத்தில் யூடியூபின் சிறந்த செஃப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து கொண்டிருந்த நிஷா, தனது உறவினர் ஒருவரின் சமையல் ப்ளாக்கை பார்த்த பிறகே இதன் மேல் ஆர்வம் கொண்டார். தனக்கு முன்னால் பல வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதை பார்த்த நிஷா, தானும் சமையல் ப்ளாக்கை தொடங்கினார். அவருடைய புரட்சிகரமான பயணத்தின் முதல் படி இதுவே.
நிஷா மதுலிகாவின் தற்போதைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ.29 கோடி எனக் கூறப்படுகிறது. டிஜிட்டல் உலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு எல்லையே இல்லை என்பதையே இவரது சொத்து மதிப்பு நமக்கு உணர்த்தும் செய்தி. ஆர்வமும் திறமையும் இருந்தால், இணையத்தின் மூலம் ஒருவர் எவ்வுளவு உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் நிஷா மதுலிகா.
தங்களுடைய திறமையை பயன்படுத்தி இன்றைய டிஜிட்டல் வியாபாரத்தில் நாமும் வெற்றி பெறலாம் என்ற உத்வேகத்தை நிஷா மதுலிகாவின் வாழ்க்கை கதை பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. இன்று இவரது யூடுயூப் சேனலை ஐந்து நபர்கள் நிர்வகிக்கிறார்கள். சாதாரண ஒரு பெண்ணாக ஆரம்பித்த இந்தப் பயணம், இன்று ஒரு குழுவிற்கே தலைமையேற்று நடத்துவதோடு உலகம் முழுவதும் தனது சமையல் திறமையை வெற்றிகரமாக வெளிப்படுத்தி வருகிறார் நிஷா.