இப்படி பணம் அனுப்பினாலும் வருமான வரித்துறை உங்களை கவனிக்கும்.. முக்கியத் தகவல்!
எளிதாக இன்டர்நெட் கிடைக்கக்கூடியதாலும், பண நேரத்தை சேமிப்பதற்காகவும் இந்தியாவில் உள்ள பெருவாரியான மக்கள் தற்போது ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் தொகை அவர்களது பழக்க வழக்கங்களுக்கு ஏற்றார் போல, பாரம்பரியமான வழியான கேஷ் ட்ரான்ஷாக்ஷன்களை விரும்புகின்றனர்.
ஆனால் ஒரு சில மக்கள் பெரிய அளவிலான தொகையை கேஷ் ட்ரான்ஷாக்ஷன் மூலமாக செய்தால் வருமான வரியில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்து கொள்கின்றனர்.
எனினும், அவர்கள் நினைப்பது முற்றிலுமாக தவறு. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் எந்த விதமான ட்ரான்ஸாக்ஷன் ஆக இருந்தாலும் சரி, அது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி செல்லும் பொழுது IT துறை அதனை கண்காணிப்பது மட்டுமல்லாமல், அதற்கான நோட்டீஸையும் உங்களுக்கு அனுப்பக்கூடும்.
இதுபோன்ற ஒரு சில டிரான்ஸ்பேக்ஷன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1 ). பேங்க் அக்கவுண்டில் பணத்தை டெபாசிட் செய்தல்
சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டேக்ஸ் (Central Board of Direct Taxes – CBDT) விதிகளின்படி, ஒரு நபர் 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் டெபாசிட் செய்யும் பட்சத்தில் அது வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.
இந்த பணம் ஒரே அக்கவுண்ட் ஹோல்டரின் அக்கவுண்டில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அக்கவுண்டிற்க அனுப்பி இருக்கலாம். குறிப்பிட்ட வரம்பை தாண்டி ஒருவர் அதிகமான பணத்தை டெபாசிட் செய்யும் பொழுது, அந்த பணத்திற்கான மூலத்தை வருமான வரித்துறையிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
2 ). ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை டெபாசிட் செய்தல்
ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் ஒரே வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் டெபாசிட் ஆகியிருக்கும் பட்சத்தில் அது குறித்து வங்கி கேள்வி எழுப்பும் என்பது போலவே இதே விதி ஃபிக்சட் டெபாசிட்களில் செய்யப்படும் ட்ரான்சாக்ஷன்களுக்கும் பொருந்தும்.
ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் டெபாசிட் செய்யும் பட்சத்தில் அந்த பணத்திற்கான மூலத்தை வருமானவரித்துறை உங்களிடம் கேட்கும்.
3 ). ஷேர், மியூச்சுவல் ஃபண்ட், டீபென்சூர் அல்லது பாண்டுகளை வாங்குதல்
பலர் ஷேர், மியூச்சுவல் ஃபண்ட், டீபென்சூர் அல்லது பாண்டுகளில் முதலீடு செய்வதை நல்ல ஆப்ஷனாக கருதுகின்றனர். இதுபோன்ற முதலீடுகள் பணத்தை சேமிப்பதற்கான ஒரு நல்ல பழக்கமாகும். ஆனால் ஷேர், மியூச்சுவல் ஃபண்ட், டீபென்சூர் அல்லது பாண்டுகளில் ஒருவர் பெரிய அளவிலான தொகையை டெபாசிட் செய்யும் பட்சத்தில் அதுகுறித்து வருமானவரித்துறைக்கு எச்சரிக்கை விடப்படும்.
இதுபோன்ற எந்த மாதிரியான முதலீட்டு ஆப்ஷன்களில் ஒருவர் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை ட்ரான்ஷாக்ஷன் செய்தால் அந்த தகவல் வருமான வரித்துறையை அடைந்து அந்த பணத்திற்கான மூலத்தை வருமானவரித்துறை உங்களிடம் விசாரிக்கும்.
4). கிரெடிட் கார்டு பில் பேமெண்ட் செலுத்துதல்
சமீப நாட்களாகவே பலர் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். உங்களது மாத கிரெடிட் கார்டு பில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும் பட்சத்தில் அந்த பணத்திற்கான ஆதாரத்தை வருமான வரித்துறையிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு நிதி ஆண்டில் நீங்கள் செய்யக்கூடிய ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ட்ரான்ஷாக்ஷன் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேலாகும் பட்சத்தில் அந்தப் பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்ற கேள்வியை வருமானவரித்துறை உங்களிடம் எழுப்பும்.
5 ). சொத்து தொடர்பான ட்ரான்ஸ்ஷாக்ஷன்
நகரங்கள் மற்றும் டயர்-2 நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒரு சொத்தை வாங்கும் பொழுது அதற்கு 30 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான கேஷ் ட்ரான்ஸ்சாக்ஷனை நீங்கள் செய்யும் பட்சத்தில், வருமானவரித் துறைக்கு அது குறித்த பதிலை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
சொத்து பதிவாளர் இது குறித்த தகவலை வருமானவரித்துறையிடம் தெரிவிப்பார். மேலும் வருமான வரித்துறை அந்த பணத்திற்கான ஆதாரத்தை உங்களிடம் கேட்கும்.