மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன..? பதிவிறக்கம் செய்வது எப்படி..?
நாட்டில் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு துவங்குவது முதல் சொத்துக்களை வாங்க, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பான் கார்டு பெற மற்றும் அரசு அமல்படுத்தி இருக்கும் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறவும் ஒருவருக்கு ஆதார் அட்டை அவசியமாக இருக்கிறது.
ஒருபக்கம் எல்லாவற்றுக்கும் ஆதார் அத்தியாவசியம் என்றார் நிலை உருவாகி இருக்கும் சூழலில், மறுபக்கம் ஆதார் தொடர்பான மோசடி சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. எனவே ஆதார் சார்ந்து நடத்தப்படும் மோசடிகளை தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஆதார் யூஸரின் விவரங்கள் திருடப்படும் அபாயத்தைக் குறைத்து ஒரு பாதுகாப்பான விருப்பமாக இருக்கிறது. எனவே மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன, அதை ஒருவர் எப்படி டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?
மாஸ்க்டு ஆதார் என்கிற ஆப்ஷன் ஒருவரின் தனியுரிமையை மேம்படுத்தவும், ஆதார் தகவல்கள் வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்தவும் UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க்டு ஆதாரில் ஒருவருடைய 12 டிஜிட் ஆதார் நம்பரின் முதல் 8 டிஜிட்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 டிஜிட்கள் மட்டுமே தெரியும். உதாரணமாக நீங்கள் உங்களது மாஸ்க்டு ஆதார் கார்டு வெர்ஷனை டவுன்லோட் செய்தால் உங்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்குகள் ‘X’ என்று குறிக்கப்பட்டு இருக்கும். கடைசி 4 இலக்குகள் மட்டுமே தெரியும். ஆனால் அதே நேரம் உங்களின் பெயர், ஃபோட்டோ மற்றும் QR கோட் போன்ற முக்கிய விவரங்கள் மறைக்கப்படாமல் வழக்கம் போல வெளிப்படையாக தெரியும். எனவே உங்கள் ஆதார் ப்ரூஃபை யாரிடமாவது கொடுக்க அல்லது ஷேர் செய்ய வேண்டும் என்றால், உங்கள் முழு ஆதார் நம்பரை காட்டும் வழக்கமான கார்டுக்கு பதிலாக மாஸ்க்டு ஆதாரை கொடுக்கலாம். இது உங்கள் பிரைவசியை பாதுகாக்க உதவும்.
மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்துவதால் கிடைக்கும் சில நன்மைகள் :
– உங்கள் தனியுரிமையை பாதுகாக்கிறது
– உங்கள் ஆதார் நம்பரை பிறர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கிறது
– உரிமம் பெற்ற நிறுவனங்கள் உட்பட பெரும்பாலான அமைப்புகளால் மாஸ்க்ட் ஆதார் ஏற்று கொள்ளப்படுகிறது
மாஸ்க்டு ஆதார் டவுன்லோடு செய்ய வழிமுறைகள் :
– UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://uidai.gov.in/ -க்கு செல்லுங்கள்
– பின் ”My Aadhaar” கீழ் இருக்கும் “Download Aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இதனை தொடர்ந்து ஆதார் டவுன்லோட் பேஜ் தோன்றும்
– பின் அந்த பேஜில் உங்களது முழுப் பெயர், பின் கோட் மற்றும் செக்யூரிட்டி கோட் போன்ற தேவையான பிற விவரங்களுடன் 12 டிஜிட் ஆதார் நம்பர் அல்லது 16 டிஜிட் விர்ச்சுவல் ஐடியை (VID) என்டர் செய்யவும்.
– பிறகு Select your preference-ல் காட்டப்படும் Masked Aadhaar ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
– பிறகு உங்களது ரெஜிஸ்டர்ட் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் OTP-ஐ பெறுவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ என்டர் செய்து வெரிஃபிகேஷன் ப்ராசஸை முடிக்கவும்.
– இறுதியாக பாஸ்வேர்ட் ப்ரொட்டக்டட் PDF வடிவத்தில் 8 டிஜிட் மறைக்கப்பட்ட உங்களது மாஸ்க்டு ஆதாரை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.