வட்டி மட்டுமே ரூ.36 லட்சம்.. போஸ்ட் ஆபிஸில் இருக்கும் சூப்பரான சேமிப்பு திட்டம்!

பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் நல்ல வருவாயை அளித்தாலும், சில நேரங்களில் சந்தையின் போக்குக்கு இணங்க இழப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த சூழலில், நடுத்தர ஊதியம் பெறும் சிறு முதலீட்டாளர்கள், சேமிப்பின் மீது பாதுகாப்பு வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், நல்ல வருவாயையும், முதலீடுகள் தொடர் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இவர்களுக்காகவே அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) :

– எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

– தற்போது, இந்த திட்டத்தில் 7.1 வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

– அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் என எங்கு வேண்டுமானாலும் பிபிஎஃப் கணக்கைத் திறக்கலாம்.

– நீங்கள் விரும்பினால், இந்த திட்டத்தின் வாயிலாக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம். இது உங்கள் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். அதாவது குழந்தைகளின் திருமணத்திலிருந்து வீடு வாங்குவது வரை என பலக் கனவுகளை நனவாக்கலாம்.

பிபிஎஃப் திட்டத்தின் வாயிலாக சேமிப்பது எப்படி?

– ரிசர்வ் வங்கி விதிகளின்படி, பிபிஎஃப் திட்டத்தில் முதலீட்டை ரூ.500 முதல் தொடங்கலாம். அதே நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.

– இந்த திட்டம் 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். கூடுதலாக 5 ஆண்டுகள் வரை இதை நீட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

– ஒவ்வொரு ஆண்டும் பிபிஎப் சேமிப்பில் ரூ.1.5 லட்சம் என 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதலீடு செய்து வரவேண்டும். இப்போது உங்கள் மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும். ஆனால் 7.1 விழுக்காடு வட்டியுடன், மொத்தம் ரூ.40,68,209 என்ற தொகையைப் பெறுவீர்கள்.

உங்கள் முதலீட்டை 5 வருடங்கள் கூட நீட்டித்தால், 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30,00,000 முதலீடு செய்வீர்கள். 7.1% வட்டி விகிதத்தில் கிடைத்த வட்டி வருவாயான 36லட்சத்து 58ஆயிரத்து 288 ரூபாயை சேர்த்து மொத்தம் ரூ.66,58,288 பெறுவீர்கள்.

– இந்த தொகையைக் கொண்டு, குழந்தைகளின் உயர் படிப்பு, திருமணம், வீடு ஆகிய தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யலாம்.

– 25 வயதில் கூட நீங்கள் பிபிஎப்பில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்கள் வெறும் 15 ஆண்டுகளில் ஒரு நல்ல அளவிலான சேமிப்பு வருவாயை ஈட்ட முடியும்.

பிபிஎஃப் நீட்டிப்பு விதிகள் :

– உள்நாட்டில் இருக்கும் இந்திய குடிமக்கள் மட்டுமே பிபிஎஃப் நீட்டிப்பைப் பெற முடியும்.

– வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை பெற்ற இந்திய குடிமக்கள் பிபிஎஃப் கணக்கைத் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால், அதை நீட்டிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை.

– பிபிஎஃப் நீட்டிப்புக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

– முதிர்ச்சி தேதியிலிருந்து 1 வருடம் நிறைவடைவதற்கு முன்பு நீங்கள் இந்த விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

– உங்கள் பிபிஎஃப் கணக்கின் காலம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ரூ.500 முதலீடு செய்ய வேண்டும்.

– இந்த குறைந்தபட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கு நிறுத்தப்படும்.

– அதை மீண்டும் செயல்படுத்த, வருடத்திற்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *