அடையாளம் இன்றி அழியும் ஆவாரம் பூ…! பொங்கலுக்கு வீடுகளின் முன் காப்பு கட்டும் ரகசியம் …
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது வீடுகளின் முன்பு ஆவாரம்பூ வைத்து காப்பு கட்டி பண்டிகையை முன்னோர்கள் கொண்டாடினர். இந்நிலையில் அழிந்து கொண்டிருக்கும் ஆவாரம் செடிகள்எதற்காக வீட்டின் முன்பு காப்பு கட்டப்பட்டது என்பது குறித்த ரகசியத்தை பார்க்கலாம்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளை தமிழர் திருநாளாக பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தைத்திருநாள் பொங்கல் பண்டிகையின் வரவேற்க வீடுகளில் முன்பு மற்றும் பொங்கல் பானையில் ஆவாரம் பூ, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை வைத்து காப்பு கட்டுவது இன்றும் நகர்புறங்களில் அழிந்தும் கிராம புறங்களில் வழக்கமாக பின்பற்றப்பட்டும் வருகிறது.
வெற்றியின் சின்னமாக கருதப்படும் இந்த ஆவாரம்பூ வைத்து வீடுகளில் முன்பு தோரணாமாக ஏன் கட்டப்படுகிறது என்று ஆன்மீக ரீதியாக பார்த்தால் திருஷ்டிக்காக கட்டப்படுகிறது என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் இதில் பாம்பு, தேள் போன்ற விச நஞ்சு கடிகள் விசமுறிவுக்கு உதவும். சிறுநீரக கோளாறுகளை சீராக்கும் என்றும், பூச்சிகள் வீட்டிற்குள் வருவதை தடுக்கும் என்றும் அஜீரண கோளாறு, வயிற்று வலி போன்றவற்றை றிற்கு சரிசெய்வதால், இதனை வீட்டின் முன்பு வைப்பதும் பொங்கலின் போது பொங்கல் பானையில் கட்டுவதற்கும் நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலகாலமாக பின்பற்றி வந்துள்ளனர்.
ஆனால் நகரங்களில் இதுபோன்ற செடிகள் அழிந்து, இதனை காண்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது. சில இடங்களில் இவை இருந்தும் மருத்துவகுணம் தெரியாமல் மக்கள் பயன்படுத்தாமல் அழித்து வருகின்றனர்
இதனால் நகரங்களில் வெறும் வேப்பிலை அல்லது மாவிலையை வைக்கின்றனர். ஆனால் கிராமப்புற பகுதிகளில் பெரியவர்கள் இன்றளவும் ஆவாரம்பூ, வேப்பிலை மாவிலை என வைத்து பாரம்பரியத்தினை பின்பற்றி வருகின்றனர்.
இந்த ஆவாரம் பூவின் நன்மைகளை அறியாததால் தான் இதன் பயன்பாடு குறைந்து ஆவாரம் செடிகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து வருகிறது, ஆதலால் ஆவாரம்பூ செடிகளை வளர்த்து ஆவாரம் பூவில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து, பாரம்பரிய பொங்கல் பண்டிகையை முறைப்படி கொண்டாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.