இது தெரியுமா ? சீரகத்தை பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால்
சளித் தொல்லை ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் .
2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
தொண்டை எரிச்சல்
எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.
பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.
இருமல்
1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்
ஜலதோஷம்
திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பின்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.
மார்புச் சளி
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.
தலை குளிர்ச்சி
காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.
மூக்கடைப்பு தீர
சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்