இது தெரியுமா ? மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து…

மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

மாதுளம் பழத்தைப் போலவே, மாதுளம்பூவிலும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்த விருத்தி அடையும். ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மாதுளம் பூக்களை உலர்த்திய பின்னர் பொடியாக்கி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாள்களில் இருமல் குறையும்.

மாதுளம் பூவை பாலில் ஊறவைத்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டால் இருமல் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும். பெண்களுக்கு கருப்பை வலுவடைய மாதுளம் பூ சாறு சாப்பிடலாம்.

மாதுளம்பூவை நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டைப்புண், வயிற்றுப்புண் உள்ளிட்டவை சரியாகும். மாதுளம் பூவை தலையில் வைத்துக்கொண்டால் தலைவலி தீரும். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் உடலை குளிர்ச்சி அடையச் செய்ய மாதுளம்பூவை அப்படியே சாப்பிட்டு வரலாம்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *