இது தெரியுமா ?முருங்கை இலையை காயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால்…
மனிதர்களின் உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. மற்ற உணவுகளைக் காட்டிலும் முருங்கையில் மட்டும் 25 மடங்கு இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே இது இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
★முருங்கை பொடியில் பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. முருங்கையில் அதிகளவு விட்டமின்களும், மினரல் மற்றும் அமினோ ஆக்ஸிடண்டுகள் உள்ளன.
★முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.
★முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
★சர்க்கரை நோய் அறிகுறிகள் இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.
★முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.
10 கிராம் முருங்கைப் பொடியில் ஒரு நாளைக்கு தேவையான 32% இரும்புச் சத்து தேவை பூர்த்தி ஆகிறது. முருங்கைக்காய் பொடி நம்முடைய இரத்த ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. எனவே மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்பு மற்றும் இரத்த இழப்பை ஈடுகட்ட உதவுகிறது. மேலும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் செயல்பட உதவி செய்யும்.
முருங்கைப் பொடி விட்டமின் ஏ மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும். இவை உங்க சருமத்தை ஆரோக்கியமாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் கோடுகள், சரும சுருக்கங்கள் ஆகியவற்றை போக்குகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் முகப்பருவை நீக்க பயன்படுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.