‘பூசணி விதை”யில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள்! வாங்க பார்க்கலாம்.
பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
மேலும் மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் அதிகமாக உள்ளது.
நாம் 100 கிராம் பூசணி விதைகளை உட்கொள்ளும் பொழுது 600 கிராம் கலோரிகளை பெறுகிறோம். நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற ஆண்களை பாதிக்கும் நோய்களுக்கு நல்ல மருந்தாக பூசணிக்காய் உள்ளது.
பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பூசணி விதையில் குயூகர்பிட்டேசின் உள்ளது. இது ப்ரோஸ்டேட் விரிவை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
பூசணி விதையில் உள்ள மாங்கனீஸ் நமது உடலில் உள்ள ரத்த அழுத்தம், உடல் எடையை குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஒரு கப் பூசணி விதையை சாப்பிட்டால் நாள் முழுவதுக்கும் தேவையான மெக்னீசியம் கிடைக்கும்.
இதில் உள்ள துத்தநாக சத்துக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துத்தநாகம் குறைபாட்டால் சளி, காய்ச்சல், சோர்வு, மன அழுத்தம், முகப்பரு, குறைந்த எடை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இதனை குணப்படுத்துவதற்காக பூசணி விதை மிகச்சிறந்த உணவாக உள்ளது. தாவர உணவுகளில் இருந்து கிடைக்கக்கூடிய ‘ஒமேகா 3’ அமிலம் பூசணி விதையில் அதிக அளவில் உள்ளது.
இது இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். பெண்கள் பூசணி விதையை தினமும் நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் வலி போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
பூசணி விதைகளை நன்றாக உலர்த்தி பொடி செய்து வைத்து தினமும் பாலில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வர உடல் வலிமை அதிகரிக்கும்.