இது தெரியுமா ? கேரட் அளவுக்கு அதிகமா உட்கொண்டால்…
சரி, இப்போது எந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று பார்ப்போம்.
கேரட் எவ்வளவு தான் கேரட் ஆரோக்கியமானது என்றாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலானது அதிக அளவில் பீட்டா-கரோட்டீனை உறிஞ்சும். பீட்டா கரோட்டீன் அதிகமானால், இரத்த செறிவு ஏற்படும் மற்றும் சருமத்தின் நிறமே ஆரஞ்சு நிறத்தில் மாறும். எனவே கேரட்டை அளவாக உட்கொண்டு, அதன் முழு பலனைப் பெறுங்கள்.
காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால், நரம்பு மண்டல பாதிப்பு, தூக்கமின்மை, தசை நடுக்கம் மற்றும் இதய படபடப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காபி குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
மீன் எண்ணெய் மீன் எண்ணெய் இதயத்திற்கு நல்லது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அதிகளவு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டினால், இரத்தம் மெலிதாகும். மேலும் ஆய்வுகளிலும் அதிகமான மீன் எண்ணெய், வைட்டமின் ஏ நச்சுத்தன்மை, பார்வை கோளாறு மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.
சூரை மீன் சூரை மீனில் மெத்தில் மெர்குரி உள்ளது. இந்த மெத்தில் மெர்குரி உடலில் அதிகமாக இருந்தால், பார்வை கோளாறுகள், குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும். எனவே வாரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளுங்கள்.
பட்டை பட்டையில் கௌமரின் அதிகம் உள்ளது. பட்டையை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்க்கும் போது, அது புற்றுநோய் அல்லது கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு உடலுக்கு 2 கிராம் பட்டை சேர்த்தாலே போதும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே அளவாக உட்கொண்டு, பலனைப் பெறுங்கள்.
பிரேசில் நட்ஸ் பிரேசில் நட்ஸில் செலினியம் ஏராளமாக நிறைந்துள்ளது. செலினியம் உடலில் அதிகமாகும் போது நச்சுமிக்கதாக மாறுகிறது. எனவே பிரேசில் நட்ஸை அளவாக உட்கொள்ளுங்கள்.
நட்சத்திர பழம் ஸ்நாக்ஸ் நேரங்களில் சாப்பிட இப்பழம் சிறந்தது. ஆனால் இப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகம் மற்றும் நிரந்தரமாக குறி புண் சிறுநீரக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இப்பழத்தை அளவாக உட்கொள்ளுங்கள்.