குண்டூர் காரம் படத்தை ஓரம் கட்டிய ஹனுமான்..ஆதிபுருஷ் இயக்குநரை வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஹனுமான்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகையொட்டி இன்று வெளியானது. படத்தின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படு மோசமான விமர்சனத்திற்கு உள்ள ஆதிபுருஷ் இயக்குநரை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்ந்து வருகின்றனர்.
பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படமான, இப்படத்தை ப்ரீமியர் ஷோவில் பார்த்த ஆடியன்ஸ் படம் அதிரிபுதிரியாக இருக்கிறது என்று கமெண்ட்ஸ் பாக்சில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஹனுமான் படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மாவை, ரசிகர்கள் ஃபெண்டாஸ்டிக்.. அற்புதமான டீம் என பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஹனுமான் படத்தை பார்த்த ரசிகர்கள் ஒருவர் படத்தை பாராட்டி பேசி உள்ளார்.
ஓரம்போன குண்டூர் காரம்: அதில், ஹனுமான் திரைப்படத்தின் பல காட்சிகள் ரசிக்கும்படி இருக்கு, ஹனுமான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், மனதிற்குள் ஒருவிதமான தெய்வீக உணர்வை உணர முடிகிறது. இந்த படம் பெரியவர்கள் மட்டுமில்லாமல் சிறியவர்களுக்கும் ரொம்பபிடிக்கும், நிச்சயம் ஹனுமான் திரைப்படம் வெற்றி பெறும். அப்படி இந்த ஹிட்டடித்தால், மகேஷ்பாபு நடித்த குண்டூர்காரம் திரைப்படத்திற்கு நிச்சயம் லாஸ் தான். அப்படி குண்டூர் காரம் தோல்வி அடைந்தால், தில்ராஜூக்கு கோவிந்தா கோவிந்தா என்று ரசிகர்கள் கூறி வருவதால், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.