தேசிங்கு ராஜா’ இரண்டாம் பாகம் தயாராகிறது

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன்வாசம், தீபாவளி, பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட பல மென்மையான காதல் படங்களை இயக்கியவர் எழில்.
ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் திடீரென காமெடி தளத்திற்கு மாறி மனம் கொத்திப் பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், தேசிங்கு ராஜா படங்களை இயக்கினார். தற்போது அவர் 10 வருடங்களுக்கு பிறகு தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, வினோத் ஆகியோரும் நடிக்கின்றனர். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்களுக்கு தனித்தனி லட்சியங்கள் இருக்கிறது.

அதனால் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள், இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது. இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள்? என்பதை மையமாக வைத்து காமெடி கதையாக உருவாகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *