சினிமாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்!
திரை உலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் சிவாஜி எம்ஜிஆர் இருவரும் சேர்ந்து இணைந்து நடித்த படம் என்றால் அது “கூண்டுக்கிளி”
என்னதான் தம்பி அண்ணன் என்று சொல்லிக் கொண்டாலும் சினிமாவில் போட்டிகள் இருக்க தானே செய்யும். அதேபோல் இந்த படம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்தது இந்த படம்.
1954 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் பி எஸ் சரோஜா குசிலகுமாரி ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம்.
இது மில் தொழிலாளியாக இரண்டு இளைஞர்கள் இருக்கும் ஒரு படத்தை பற்றி தான் எடுத்திருப்பார்கள். இரண்டு இணைபிரியா நண்பர்கள். அவர்களது வாழ்வில் நடக்கும் சோகம் ஆகியவற்றை எடுத்து விளக்கும் படம் தான் இது.
ஒரு இளைஞனின் காதலி சந்தர்ப்ப வசத்தால் நண்பனின் மனைவியாகிறாள். நண்பனின் மனைவி ஆன பின்னரும் தனது காதலியை அவன் மறக்கவில்லை. அவளை தொடர்ந்து காதலிப்பது மட்டுமின்றி அடையவும் துடிக்கிறான். அதெல்லாம் தெரியாத நண்பன் அவனை தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான். அதனால் ஏற்படும் பிரச்சனைதான் படத்தின் கதை.
இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்களின் வேதனைகளைப் பற்றி எடுத்துக் கூறும் படமாக இது இருந்தது. அப்பொழுது இந்த படம் சரியாக ஓடவில்லை .
அதன்பின் எம்ஜிஆர் திமுகவில் இணைந்தார் சிவாஜி காங்கிரஸில் இணைந்தார். இதுதான் சரியான கட்டம் என்று நினைத்த விநியோகஸ்தர்கள் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம் என்று விளம்பரம் செய்து படத்தை மறுபடியும் திரையிட்டனர்.
படம் மாபெரும் வெற்றி பெற்றது. சாதனைகளை பணத்தை குவித்தது. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
சேலத்தில் முதலில் மோதல் ஆரம்பிக்கவே, அனைத்து ஊர்களிலும் மோதல் முற்றத் தொடங்கியது. தியேட்டர்களில் மோதல் இருக்கக் கூடாது என்று விளம்பரம் செய்தும் மோதல்கள் வந்து கொண்டே இருந்தன.
பின் கூண்டுக்கிளி படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது.