அஜித் ஏன் பாராட்டு விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை?
ஒரு விழா நடந்தால் ஒரு பாராட்டு விழா நடந்தாலும் அல்லது கலை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என நடைபெற்றாலும் நாம் அஜித்தை பார்க்க முடிவதில்லை.
அனைத்து திரையுலகினரும் வந்தாலும் அஜித் வர மாட்டார். ஏன் என்று பலருக்கும் தெரியவில்லை.
1983 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது
அப்பொழுது அனைத்து துறையும் உலகினரும் கமல் ரஜினி ஸ்ரீபிரியா பாரதிராஜா இளையராஜா இளையராஜா என அனைத்து திரையுலகினரும் கலந்து கொண்டனர்.
மவுண்ட் ரோடையே மூடிவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. அனைத்து திரையு உலக பிரபலங்களும் டிராக்டரில் வந்து கையைசைத்து மக்களை குஷி படுத்தினர்.
அதன் பிறகு கருணாநிதி முதல்வரானார். 2010 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” என்று திரைப்படத்துறையின் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைத்து தமிழ் பிரபலங்களும் ஏன் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூட இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
கலா மாஸ்டர் நிகழ்ச்சி மானாட மயிலாட கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்றது.
கருணாநிதி வசனத்தில் வெளிவந்த “ராஜாராணி” படத்தில் சிவாஜி முழங்கும் காட்சிகள் திரையிடப்பட்டன. கலைஞரே கண்கலங்கி விட்டார்.
அதை பார்த்த ரஜினி, கமல், பிரபு, விஜய் எல்லோரும் கலங்கி கண்ணீர் விட்டனர்.
இப்படி அனைவரும் உணர்ச்சி பொங்க அடுத்து வந்தவர்தான் நம் தல ‘ அஜித் ‘.
தல அஜித் அவர்களை பேச அழைத்தார்கள். அவர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை விட்டு விலாசிவிட்டார்.
“அய்யா, நிகழ்ச்சிகளுக்கு நடிகர், நடிகைகளை கட்டாயப்படுத்தி வரவழைக்கிறார்கள். வராவிட்டால் மிரட்டுகிறார்கள்.
நீ தமிழன் இல்லையென்று பிரச்சாரம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் அய்யா.
எங்களுக்கு அரசியல் வேண்டாம். பிரச்சினைகளை அரசு பார்த்துக்கொள்ளும். நாங்கள் நடிப்பை பார்க்கிறோம் அய்யா” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.”
இப்படி சொன்னதும் அந்தக் கருத்தை ஆமோதிக்குமாறு ரஜினி எழுந்து நின்று கைதட்டினார். கமல் உறைந்து விட்டார்.
அவ்வளவுதான், அடுத்த நாள் ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விளம்பரங்கள் வர தொடங்கின. எதிரொலிகள் வரத் தொடங்கின.
திரைப்பட சங்கத்தின் குழுக்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து அஜித் மன்னிப்பு கேட்குமாறு சொல்லப்பட்டது.
பெப்ஸி தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். மிரட்டியும் கேட்போம். கேட்காதவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்…” என்று வில்லன் ரேஞ்சுக்கு பேசினார்.
ராதிகா ராதாரவி சரத்குமார் ஆகியோர் அஜித்துக்கு எதிராக கடுமையாக பேசினார்கள்.
அஜித் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம்’ என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியது.
அதையெல்லாம் அஜித் கண்டு கொள்ளவே இல்லை.
அதன் பின் கருணாநிதி உடன் ரஜினி கருணாநிதி அஜித் மூவருக்கும் உரையாடல் நடந்த பின் கருணாநிதி அறிக்கை வெளியிட, அனைத்தும் சுமூகமானது. அதன் பிறகு அஜித் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.